தனது சமூக அக்கறையை, மக்களின் மீது அக்கறை கொள்ளாத ஆட்சியாளர்கள் மீதான கோபத்தை, நம் மண்ணின் வளங்களை அழித்தொழிக்க நினைப்பவர்களுக்கு துணை போகிற அரசின் மீதான கண்டனத்தை பாடல்களாக உருவாக்கி, 'டிப் டாப் தமிழா' யூ டியூப் சேனலில் வெளியிட்டு பரபரப்பு கிளப்பிக் கொண்டிருக்கிறார் மன்சூர்.
அந்த வகையில் ஏற்கனவே வந்த 'வந்தேமாதரம் என்போம்', 'ஏமாத்துறான் ஏமாத்துறான்' என இரண்டு பாடல்கள் வெளியாகி பெரியளவில் வரவேற்பு பெற்றதையடுத்து, மூன்றாவது பாடலை படு ரகளையாக உருவாக்கி வெளியிட்டிருக்கிறார்.
மன்சூர் அலிகானை ஏதோவொரு விஷயத்துக்காக அந்த பெண் போலீஸ் கைது செய்து, லாக்கப்பில் அடைக்கிறாள். மன்சூர் அலிகான் அவளை தன் இதயச் சிறைக்குள் அடைக்கிறார். அந்த லவ் மூடுக்கு ஏற்றபடி ஒரு பாட்டு. 'கைதி - மன்சூர் அலிகான் வெர்சன்' என்பது தான் கான்செப்ட்!
'ஏண்டா என்னப் போட்டு சாவடிக்கிற..' என்ற அந்த பாடல் செம ஹாட். பாடலில் மன்சூர் அலிகானுடன் தனது டேஞ்சரான, செழிப்பான வளைவு நெளிவுகளைக் காட்டி சூடேற்றுகிறார் மேற்கு வங்காளத்து ரசகுல்லா சுபாங்கி!
பாடல் வரிகள், இசை, நடனம் என ஏற்கனவே வந்த ஆல்பத்தின் அத்தனை அம்சங்களையும் உருவாக்கிய மன்சூர் அலிகானின் அசத்தல் கிரியேடிவிடி, இந்த பாடலிலும் தொடர்கிறது படு கலக்கலாக!
பாடல் குறித்து மன்சூர் அலிகானிடம் கேட்ட போது, “கடந்த சில வருஷங்களாத்தானே மியூசிக் ஆல்பம்லாம் பண்றாங்க. நான் 94-லேயே 'சிக்குச்சா சிக்குசிக்கு'னு 7 பாடல்கள் கொண்ட ஆல்பம் பண்ணேன். இப்போ ரொம்ப ஃபேமஸா இருக்கிற பாடகி கல்பனா, அந்த பாடல்களை பாடியிருந்தாங்க. அது தவிர, நான் இயக்கிய எல்லா படங்களுக்கும் பாடல், இசை எல்லாமே நான்தான். வரவேற்புக்காக பாடல்கள் காட்சிகளை தாறுமாறா அமைச்சாலும் அதுல ஒரு வரியாச்சும் சமூகத்துக்கு கருத்து சொல்ற விதமா இருக்கும். இப்போ ரிலீஸாகியிருக்கிற 'ஏண்டா என்னப் போட்டு சாவடிக்கிற..' பாட்டுலயும் கொரோனாவ இழுத்து விட்டிருக்கேன். பாருங்க உங்களுக்கே புரியும்'.” என்றார்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...