ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த நயந்தாரா, தற்போது கதையின் நாயகியாக நடித்து வருவதல், அவருக்கு ஜோடி தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், ’ஈரம்’, ‘வல்லினம்’, ‘குற்றம் 23’ என தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கி வரும் அறிவழகன், அடுத்ததாக நயந்தாராவை கதையின் நாயகியாக வைத்து படம் ஒன்றை இயக்குகிறார்.
எஸ்.பி.சினிமாஸ் சார்பில் ஷங்கர் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்க, கே.எம்.பாஸ்கர் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் ஹீரோ நயந்தாரா தான் என்றாலும், கதையின் முக்கிய பகுதியில் அவருக்கு ஜோடி இருக்கிறதாம். அந்த வேடத்தில் நடிக்க வைப்பதற்காக ஒருவரை தேடி வரும் இயக்குநர் அறிவழகன், இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார்.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...