சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 4-ல் போட்டியாளர்களில் ஒருவரான சனம் ஷெட்டி, ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாக தகவல் பரவியது. காரணம், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சனம், இறுதி சுற்றின் போது, விருந்தினராக மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வரும் போது, நெற்றியின் மேல் பகுதியில் திருமணம் ஆன பெண்கள் போல குங்குமம் வைத்திருந்தார்.
இதனால், சனம் ஷெட்டிக்கு திருமணமாகி விட்டதாக கூறப்பட்டது. அதே சமயம், கர்நாடக மாநிலத்தில் திருமணம் ஆகாத பெண்கள் கூட நெற்றியின் மேல் பகுதியில் குங்குமம் வைத்துக் கொள்ளும் பழக்கம் உடையவர்கள் என்பதால், சனம் ஷெட்டியும் அப்படித்தான் குங்குமம் வைத்துக் கொண்டதாகவும் சிலர் கூறியிருந்தார்கள்.
ஆனால், இது குறித்து எந்த ஒரு விளக்கமோ அல்லது மறுப்பு தெரிவிக்காமல் சனம் ஷெட்டி மவுனம் காத்து வந்ததால், அவருக்கு திருமணம் நடந்து உண்மையாக இருக்கலாம், என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், தனது திருமணம் பற்றி முதல் முறையாக பேசியிருக்கும் சனம் ஷெட்டி, எனக்கு திருமணம் நடக்கவில்லை. ஆனால், உங்களுடைய ஆசிர்வாதத்தினால் விரைவில் நடக்கும். நெற்றியின் வடுகில் குங்குமம் வைப்பதற்கு எங்கள் குடும்ப பழக்கம், என்று விளக்கம் அளித்துள்ளார்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...