நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தயாரிப்பதோடு, புதுமுக இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்பளித்தும் வருகிறார். அந்த வகையில், 2டி நிறுவனம் தங்களது 14 வது திரைப்படத்தின் படப்பிடிப்பை இன்று தொடங்கியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி சுற்று வரை சென்று மக்களிடன் வரவேற்பை பெற்ற ரம்யா பாண்டியன் பிராதன கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகி தனது நடிப்பால் பாராட்டு பெற்று பல படங்களில் நடித்து வரும் வாணி போஜன் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும், இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு கதாநாயகனாக மித்துன் மாணிக்கம் என்பவர் அறிமுகமாகிறார். இவர்களுடன் 'கோடங்கி' வடிவேல் முருகன், செல்வேந்திரன் ஆவுடையப்பன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கும் இப்படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல பாடகர் க்ரிஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை கோகுலம் ஸ்டியோவில் இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில், படக்குழுவினருடன் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன், தமிழ்நாடு துப்பாக்கி சுதல் சங்க செயலாளர் ஆர்.ரவி கிருஷ்ணன், இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், சக்தி பிலிம் பேக்டரி பி.சக்திவேலன், கலரிட்ஸ்ட் பாலாஜி கோபால், இயக்குநர் ஜே.ஜே.ஃபிரடெரிக் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டார்கள்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...