இந்தியில் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் கடந்த நான்கு வருடங்களாக தமிழிலும் ‘பிக் பாஸ்’ என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒளிபரப்பாகி வருகிறது.
மலையாளத்தில் மோகன்லால் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்ட பிரபல மலையாள சினிமா பின்னணி பாடகர் சோம்தாஸ் மரணம் அடைந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
42 வயதாகும் சோம் தாசுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அவர் கொல்லத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சோம்தாசின் மறைவு மலையாள திரையுலகினரிடையேயும், பிக் பாஸ் ரசிகர்களிடையும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...