சினிமா நடிகைகள் ஓய்வு பெறும் நேரங்களில் சீரியலுக்கு தாவுவது வழக்கமாக இருந்த நிலையில், தற்போது சீரியலில் நடிக்கும் நடிகைகள் சினிமாவிலும் பிரபலமாவது டிரெண்டாகி வருகிறது. பிரியா பவானி சங்கர், வாணி போஜன் ஆகியோர் சீரியலில் நடித்து பிறகு சினிமாவில் கதாநாயகியாக வெற்றி பெற்றதால், தற்போது சீரியலில் நடிப்பதில் ஏராளமான நடிகைகள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார்கள்.
அந்த வகையில், ‘குரங்கு பொம்மை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான மலையாள நடிகை டெல்னா டேவிஸ், பட வாய்ப்புகள் இல்லாததால் சீரியல்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அன்பே வா’ தொடரில் கதாநாயகியாக நடித்து வரும் டெல்னா டேவிஸ், கொடுக்கும் டார்ச்சரால், ‘அன்பே வா’ சீரியல் குழுவினர் பறிதவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிவி சீரியல்களின் படப்பிடிப்பு பெரும்பாலும் வீடுகளில் நடைபெறுவதால் நடிகர், நடிகைகளுக்கு கேரோவேன் வழங்க மாட்டார்கள். படப்பிடிப்பு நடைபெறும் வீடுகளில் அனைத்து வசதிகளும் இருப்பதால், அங்கிருக்கும் அறைகளையே நடிகர், நடிகைகள் பயன்படுத்துவது தான் வழக்கம்.
ஆனால், டெல்னா டேவிஸ், கேரோவேன் கேட்டு அடம்பிடிக்கிறாராம். கேரோவேன் வழங்கவில்லை என்றால், ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி, படப்பிடிப்பில் பங்கேற்காமல் டிமிக்கி கொடுக்கிறாராம்.
இப்படி பல வகைகளில் படக்குழுவினருக்கு தொல்லை கொடுப்பவர், சமீபத்தில் ஹேர் ஸ்டைலிஷ் பணியை செய்து வந்த திருநங்கை ஒருவரை பணியில் இருந்து நீக்கிவிட்டு, கேரளாவில் இருந்து வேறு ஒரு ஹேர் ஸ்டைலிஷை வர வைத்தாராம்.
சீரியலும் பெரிய ஹிட் இல்லை, சினிமாவிலும் இவர் பிரபலம் இல்லை, என்றாலும், டெல்னா டேவிஸ் டார்ச்சர் கொடுப்பதற்கு காரணம், சீரியல் தயாரிப்பு நிறுவனத்தின் உயர் அதிகாரி தான் என்றும் கூறுகிறார்கள்.
டெல்னா டேவிஸ் சொல்வதை அப்படியே கேட்டு அவருக்கு சகல வசதிகளையும் செய்து கொடுக்கும் அந்த உயர் அதிகாரியின் செல்லத்தால் தான், நடிகையின் டார்ச்சர் தற்போது எல்லை மீறியிருப்பதாக, ‘அன்பே வா’ சீரியல் குழு புலம்பி வருகிறது.
கார்ப்பரேட் நிறுவனமான சரிகமா, நடிகை கேட்கும் கேரோவேன் உள்ளிட்ட கூடுதல் வசதியை கொடுத்து விடலாம். ஆனால், இதையே மற்ற நடிகைகள் பின் தொடர்ந்தால், தனிப்பட்ட சீரியல் தயாரிப்பாளர்கள் நிலை என்னாகுமோ.,
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...