‘டாக்டர்’ மற்றும் ‘அயலான்’ ஆகிய படங்களை முடித்திருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் நடிக்கிறார். ‘டான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் முதல்பிரதி அடிப்படையில் தயாரிக்கிறது.
சிபி சக்ரவர்த்தி என்ற அறிமுக இயக்குநர் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியான நிலையில், தற்போது படத்தின் ஹீரோயின் மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய விவரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன், ‘டான்’ படத்திலும் ஜோடியாக நடிக்கிறார். காமெடி வேடத்தில் சூரி நடிக்க, இயக்குநர்கள் சமுத்திரக்கனி மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில், எஸ்.ஜே.சூர்யா டான் படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதே சமயம், எஸ்.ஜே.சூர்யாவின் கதாப்பாத்திரம் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமான தகவல் எதையும் வெளியிடவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...