Latest News :

’நானும் சிங்கிள் தான்’ பட கதை உருவாக நயன்தாரா தான் காரணம்! - இயக்குநர் சொல்லிய சீக்ரெட்
Friday February-05 2021

த்ரீ இஸ் ஏ கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் (Three is a company production) நிறுவனம் மற்றும் புன்னகை பூ கீதா இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘நானும் சிங்கிள் தான்’. ‘அட்டக்கத்தி’ தினேஷ் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தை ஆர்.கோபி என்ற அறிமுக இயக்குநர் எழுதி இயக்கியுள்ளார்.

 

நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்ற இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படம் குறித்து பேசிய இயக்குநர் ஆர்.கோபி, ”எனக்கு குரு என்றால் தமிழ்தாசன் சார் தான். நான் இண்டிபெண்டண்ட் இயக்குநர் என்றாலும் எனக்கு நிறைய கத்துத் தந்தது அவர் தான். அவர் ஒரு ஜீனியஸ்.  

 

விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. எனது வெப்சீரிசைப் பார்த்துவிட்டு என்னை தயாரிப்பாளர்கள் அப்ரோச் செய்தார்கள். இந்தப்படம் யூத் மற்றும் பேமிலி ஆடியன்ஸ்க்கான படமாகவும் இருக்கும்..  நடிகர் சிவகார்த்திகேயன் நான் ஆங்கராக இருந்து சினிமாவிற்கு வரா ஆறு வருடங்கள் ஆனது என்று சொல்லுவார் அதே போல் நானும் சினத்திரையில் இருந்து சினிமாவிற்கு வர ஆறாண்டுகள் ஆகிவிட்டது. நான் முதல் முறையா மேடையின் முன் நிற்கிறேன். பின்னாடி  நிறைய உழைத்திருக்கிறேன்.

 

நானும் சிங்கிள் தான் என்னோட கதை, உங்களோட கதை, நம்மளோட கதை. 30 வயசுல கல்யாணம் பண்ணலன்னா உனக்கு படம் கிடைக்காதுன்னு சொன்னாங்க. படம் கமிட் ஆனதும் எனக்கு கல்யாணம் நடந்தது. அதனால் சிங்கிள்ஸ் இப்படத்தைப் பாருங்க கல்யாணம் நடக்கும்.  

 

6 வருடதிற்கு  முன்பு நயன்தாரா மேடத்தை பார்த்த போது எவ்ளோ அழகா இருக்காங்க என்று தோன்றியது. அந்த இன்ஸ்பையர் தான் படத்தில் வரும் நயன்தாரா பற்றிய டயலாக். படத்தில் நிறைய விசயங்கள் புதுசா இருக்கும். படம் கண்டிப்பா நிறைவா இருக்கும். தியேட்டரில் போய் படத்தைப் பாருங்க. தினேஷ் சார், தீப்தி மேடம் எனக்கு நன்றாக சப்போர்ட் செய்தார்கள். படத்தில் இசை அமைப்பாளர் கேமராமேன் உள்ளிட்ட  அனைவரும் சிறப்பான உழைப்பை கொடுத்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தலைமை பொருப்பாளர் தமிழ்தாசன் பேசுகையில், “இந்த விழாவிற்கு கோபிக்காக தான் வந்தேன். கோபி ரொம்ப ஷார்ப்பான பையன். என்னை குரு என்றார். ஆனால் குருவிற்கு முன் படம் பண்ணிட்டார். எதையும் பாஸ்டா அடாப் பண்ணிப்பார். இன்று டிவியில்  இருந்து படம் பண்ண வருவது என்பது ரொம்ப கஷ்டம். அதை கோபி இலகுவாகி இருக்கிறார். படத்தில் டிரைலர் பாடல் எல்லாமே நல்லாருக்கு. அவரோட ஸ்பெசல் டயலாக். அது நல்லாருக்கும் என நினைக்கிறேன். படத்தில் எல்லாமே நன்றாக இருக்கிறது. எல்லாருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.” என்றார்.

 

இளைஞர்கள் மட்டும் இன்றி அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற காதல் கதையாக உருவாகியுள்ள ‘நானும் சிங்கிள் தான்’ வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Related News

7271

”’தண்டேல்’ படத்திற்காக என்னை மாற்றிக் கொண்டேன்” - நடிகர் நாக சைதன்யா
Friday January-31 2025

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...

விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ‘தருணம்’! - ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகிறது
Wednesday January-29 2025

சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள  "தருணம்"  திரைப்படம், வரும்  ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான  திரையரங்குகளில் உலகமெங்கும்  வெளியாகிறது...

ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘மை லார்ட்’ படத்தின் முதல் பார்வை வெளியானது!
Wednesday January-29 2025

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...

Recent Gallery