மக்களிடம் பிரபலமாக இருக்கும் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் ஜாக்குலினும் ஒருவர். விஜய் தொலைக்காட்சி மூலம் தொகுப்பாளினியான இவர், தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை ஜாக்குலின் திருமணத்திற்கு ரெடியாகி விட்டார். அவரை திருமணம் செய்துகொள்ள இருப்பவர் யார்? என்பதை அவரே சமீபத்தில் அறிவித்தார்.
அதாவது, தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவ்வபோது பதில் அளிப்பது ஜாக்குலினின் பழக்கம். அப்படி ஒரு முறை ரசிகர்களுடன் அவர் உரையாடிய போது, ஒரு ரசிகர், எப்போது திருமணம்? என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த ஜாக்குலின், நான் மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறேன். நல்ல மாப்பிள்ளையாக இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள், என்று விளையாட்டாக பதில் அளித்தார்.
அவருடைய இந்த பதிலை பார்த்த ரசிகர்கள் பலர், “நான் ரெடி” என்று கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...