மக்களின் பேவரைட் தொலைக்காட்சி தொடர்களில் ஒன்று ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் தமிழ் மட்டும் இன்றி இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட்ட விஜய் தொலைக்காட்சியின் முதல் தொடர் என்ற பெருமையும் இந்த தொடருக்கு கிடைத்துள்ளது.
இந்த தொடரின் முக்கிய கதாப்பாத்திரமும், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வேடமாகவும் இருந்த முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்த சித்ரா கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதால், அந்த வேடத்தில் வேறு ஒரு நடிகை நடித்து வருகிறார்.
இதற்கிடையே, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ராவுக்கு ஜோடியாக கதிர் வேடத்தில் நடித்து வந்த குமரன், சித்ரா மரணத்தால் ரொம்பவே அப்செட்டானதோடு, தனது சோகத்தை சமூக வலைதளங்களிலும் வெளிப்படுத்தி வந்தவர், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் கடந்த சில எப்பிசோட்களில் அவர் காணவில்லை.
இது குறித்து விசாரித்த போது, சித்ரா மரணத்தினால் மிகவும் அப்செட்டான குமரன், புதிதாக வந்திருக்கும் நடிகையுடன் சரியான கெமிஸ்ட்ரி ஏற்படவில்லை என்று கூறி வந்ததாகவும், இதனால், அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது.
மேலும், குமரனின் முடிவால் அதிர்ச்சியடைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர், அவருக்கு பதில் வேறு ஒரு நடிகை நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால், குமரன் பற்றி பரவும் தகவல்களில் துளியும் உண்மை இல்லை. அவர் தற்போது ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக பெங்களூர் சென்றுள்ளதால், பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், சினிமா படப்பிடிப்பை முடித்தவுடன், அவர் மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவுடன் இணைய உள்ளதாகவும், மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இரண்டு தகவல்களில் எது உண்மை, என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் தான் தெரிவிக்க வேண்டும்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...