’அயலன்’ மற்றும் ‘டாக்டர்’ ஆகிய படங்களை முடித்த சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘டான்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கிறது.
கல்லூரி பின்னணியில் காமெடியாக உருவாக இருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
’டாக்டர்’ படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் பிரியங்கா மோகன், இப்படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இயக்குநர்கள் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். காமெடி வேடத்தில் சூரி நடிக்கிறார்.
இந்த நிலையில், பாலசரவணன், முனிஷ்காந்த், காளி வெங்கட், ‘குக் வித் கோமாளி’ புகழ் சிவாங்கி, விஜே விஜய் ஆகியோரும் ‘டான்’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர்.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் - அனிருத் கூட்டணியால் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘டான்’ படத்தில் தற்போது காமெடி நட்சத்திரங்கள் குவிந்து வருவதால் படம் மிகப்பெரிய காமெடி கலாட்டாவாக இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...