அஜித் நடித்த ‘சிட்டிசன்’, ‘ஏபிசிடி’ போன்ற படங்களை இயக்கிய ஷரவணன் சுப்பையா, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘மீண்டும்’. ஹீரோ சினிமாஸ் சார்பில் சி.மணிகண்டன் தயாரிக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் வைரமுத்து எழுதியுள்ளார். நரேன் பாலகுமார் இசையமைத்துள்ளார்.
கதிரவன் ஹீரோவாக நடிக்க, அனகா ஹீரோயினாக நடித்திருக்கிறார். இயக்குநர் ஷரவணன் சுப்பையா முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரணவ் ராயன், இயக்குநர்கள் எஸ்.எஸ்.ஸ்டான்லி, வி.சுப்பிரமணியன் சிவா, ‘யார்’ கண்ணன், கேபிள் சங்கர், துரை சுதாகர், சுபா பாண்டியன், இந்துமதி மணிகண்டன், மோனிஷா, அனுராதா நாகராஜன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஆணுக்கு பெண் நிகர், என்று பெருமை பேசினாலும், தற்போதைய சூழலிலும், ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் வாழ்வதை ஏற்றுக்கொள்ளும் இந்த சமூகம், பெண்கள் அப்படி வாழ்ந்தார், ஏற்றுக்கொள்வதில்லை ஏன்? என்ற கேள்வியை மையமாக வைத்து இப்படத்தை ஷரவணன் சுப்பையா இயக்கியுள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் வைரமுத்து, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி, செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு இசை குறுந்தகடை வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, ‘மீண்டும்’ படம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் ஒரு படமாக இருக்கும். இயக்குநர் ஷரவணன் சுப்பையா, கதையை கையாண்ட விதம் பிரமிப்பாக இருக்கும், என்று வாழ்த்தினார்.
படம் குறித்து இயக்குநர் ஷரவணன் சுப்பையா பேசுகையில், “படத்தை பலர் பெரிய அளவில் பாராட்டி பேசியிருக்கிறார்கள். ஆனால், பெரிய எதிர்ப்பார்ப்பு இன்றி படம் பார்க்க வந்தால் இந்த படம் ஒரு நல்ல படமாக இருக்கும். நான் புதிசாக செய்திருக்கிறேன், என்று சொல்ல மாட்டேன். ஏற்கனவே சொல்லப்பட்ட கதை தான், ஆனால், அதை வேறு ஒரு பாணியில் மக்களுக்கு பிடிக்கும் வகையில் சொல்லியிருக்கிறேன். இந்த படத்தின் மூலம் ஹீரோ கதிரவன் பெரிய இடத்திற்கு செல்வார். அந்த அளவுக்கு அவர் கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறார்.” என்றார்.
ஸ்ரீநிவாஸ் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராஜா முகமது படத்தொகுப்பு செய்துள்ளார். சூப்பர் சுப்பராயன் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். மணிமொழியன் ராமதுரை கலையை நிர்மாணிக்க, ராதிகா நடனம் அமைத்துள்ளார். மக்கள் தொடர்பாளராக விஜயமுரளி பணியாற்றுகிறார்.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...