விஜயின் ‘மெர்சல்’ தீபாவளிக்கு வெளியாவதால், அன்றைய தினம் பிற படங்கள் வெளியாகமல் இருந்த நிலையில், சசிகுமார் தனது ‘கொடிவீரன்’ படத்தை வெளியிடுவதாக அறிவித்தார். இதற்கிடையே நடிகர் விஷாலும் தீபாவளி ரேஷில் பங்கேற்றுள்ளார்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் என்று தொடர்ந்து வெற்றி வாகை சூடி வரும் விஷால், தயாரிப்பாளர் நடிகர் என்று தொடர்ந்து பல வெற்றிகளை ருசித்துக்கொண்டு வருகிறார். அவரது சமீபத்தில் வெளியீடான ‘துப்பறிவாளன்’ மிகப்பெரிய வெற்றி பெற்று, தற்போது ரசிகர்களின் அமோக வரவேற்போடு ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ’டிடேக்டிவ்’ (Detective) என்ற தலைப்பில் தீபாவளி பண்டிகையான அக்டோபர் 18 ஆம் தேதி துப்பறிவாளன் தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது. அதே நாளில், விஷால் மோகன்லாலுக்கு வில்லனாக நடித்துள்ள மலையாள த்ரில்லர் படம் ‘வில்லன்’ அதே நாளில் ரிலீஸ் ஆகிறது. மேலும், அறிமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘இரும்புத்திரை’ ஜனவரி மாதம் 12 ஆம் தேதி, பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.
இந்த வருடம் தனது வித்யாசமான படைப்புகளால் விஷால் ரசிகர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...