தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், தனது ரசிகர் மன்றத்தை கலைத்து பல ஆண்டுகள் ஆனாலும், அவரது புதிய படங்கள் ரிலீஸீன் போது அஜித் ரசிகர்கள் தியேட்டரில் பேனர் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது ஆகியவற்றை தொடர்ந்து செய்துக் கொண்டிருப்பதோடு, சமூக வலைதளம் வாயிலாகவும், அஜித் மற்றும் அவர் பற்றிய தகவல்களை அவ்வபோது வைரலாக்கி வருகிறார்கள்.
இப்படி அஜித்தின் வெறித்தனமான ரசிகர்களாக இருப்பவர்கள் சிலரால் அஜித்துக்கு பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது. அதாவது, அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு, அரசியல் நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகள் என பல இடங்களில் அஜித் ரசிகர்கள் செய்யும் அலப்பரைகள் தாங்க முடியவில்லை.
இந்த நிலையில், ரசிகர்களின் இந்த செயலால் அஜித்துக்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதோடு, இதை அவர் ரசிகர்களால் தனக்கு ஏற்பட்ட அவமானமாக பாவித்து, தனது வருத்தத்தை அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் மீதும் என் படங்களின் மீதும் அபரிவிதமான அன்புக் கொண்டு இருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்.
கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் ‘வலிமை’ படம் சம்மந்தப்பட்ட அப்டேட் கேட்டு, அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுது போக்கு மட்டுமே, எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும், சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும்.
இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செய்படுவார்கள் என நம்புகிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...