கைபேசி கலாச்சாரமும், அதனால் ஏற்படும் சமூக அவலம் மற்றும் பாதிப்புகளை நம் கண் முன் நிறுத்தும் படமாக உருவாகியுள்ளது ‘ராஜலிங்கா’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் மூலம் பிரபல திரைப்பட விநியோக நிறுவனமான நியு ஆர்.எஸ்.எம் பிலிம்ஸ் முதல் முறையாக திரைப்பட தயாரிப்பில் இறங்குகிறது.
நியு ஆர்.எஸ்.எம் பிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் திருச்சி மாரிமுத்து தயாரிக்கும் இப்படத்தில் கதை நாயகனாக ஷிவபாரதி நடிக்க, அவருக்கு ஜோடியாக ஜாய் பிரியா நடிக்கிறார். இவர்களுடன் மாறன் பாண்டியன், குமரேசன் ராஜேஷ், ரோடிஷா, தியா, அரிகரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
சத்யகண்ணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு வல்லவன் இசையமைக்கிறார். செந்தில் கருப்பையா படத்தொகுப்பு செய்ய, மிரட்டல் செல்வா சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். ஆண்டோ தாஸ், சரண் பாஸ்கர் நடனம் அமைக்கிறார்கள்.
இப்படத்தை இயக்கியிருக்கும் ஷிவபாரதி தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறைச் சேர்ந்தவர். இயக்குநர் ராதாபாரதி உள்ளிட்ட பலரிடம் பணியாற்றியவர். படம் குறித்து இயக்குநர் ஷிவபாரதி கூறுகையில், “இப்படம் தற்காலத்தில் அதிகம் பேசப்படும் ஒரு சிக்கலை மையமாகக் கொண்டு எடுத்திருக்கிறேன். அழகை பார்த்து காதல் வயப்படும் ஆண், பெண் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் முன் வரம்புமீறி நடப்பதால் பெற்றோர்களுக்கும், பொது சமூகத்துக்கும் ஏற்படும் நெருக்கடியை பேசுகிறது இப்படம். ஒரு காலத்தில் சமூகத்தில் நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்களுக்கு தமிழ் சினிமா மீது பழி போடப்பட்டது. இன்றைக்கு உலகம் கையடக்க கைபேசிக்குள் அடங்கி போனது. இதனை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துவதை காட்டிலும் மனித சமூகத்துக்கு எதிரான செயல்களுக்கு எதிராகவே அதிகம் பயன்படுத்தபடுகிறது. அப்படி ஒரு பாதிப்பை எதிர்கொள்ளும் காதல் ஜோடியை பற்றிய கிரைம் திரில்லராக இப்படத்தின் திரைக்கதை அமைத்திருக்கிறேன்.” என்றார்.
திருச்சி மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளை கடந்து விநியோகத்துறையில் இருக்கும் திருச்சி மாரிமுத்து ராஜலிங்கா படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாவது குறித்து கூறுகையில், “இயக்குநர் ஷிவபாரதி கூறிய கதை இன்றைய கைபேசி கலாச்சாரத்தையும், அதனால் ஏற்படும் சமூக அவலம், பாதிப்பை கண்முன்னால் நிறுத்தியது. அதனால் தமிழில் தயாரிப்பாது என்று படப்பிடிப்பை தொடங்கினோம். படத்தின் கதையை கேட்டதெலுங்கு திரைப்பட துறை விநியோகஸ்தர்கள் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் இப்படம் ரசிகர்களை கவரும் என கூறியதால் இரு மொழியிலும் ராஜலிங்கா படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம். சென்னை, ஹைதராபாத், விசாகபட்டினம், கொடைக்கானல் அடர்ந்த வனப்பகுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தினோம். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது. இதில் பிரபலமான தெலுங்கு நடிகரை கௌரவ வேடத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ராஜலிங்கா படத்தின் தெலுங்கு படத்தின் முதல் பார்வை சிவன் ராத்திரி அன்று வெளியிட உள்ளோம்.” என்றார்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...