தமிழ் சினிமாவி பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வரும் ஆண்ட்ரியா, சர்ச்சையான கதாப்பாத்திரங்களில் நடிப்பதோடு, நிஜ வாழ்க்கையிலும் அவ்வபோது பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
இசையமைப்பாளர் அனிருத்துடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்த, அதன் பிறகு அரசியல் வாரிசு நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டு அவருடன் குடும்பம் நடத்தியுள்ளார். ஏற்கனவே திருமணமான அந்த நடிகர் ஆண்ட்ரியாவை படாதபாடு படுத்தியதால், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்ட ஆண்ட்ரியா சிறிது காலம் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டார்.
இது குறித்து ஆண்ட்ரியாவே நிகழ்ச்சி ஒன்றில் கூறியதோடு, அந்த நடிகர் யார்? என்பதை அறிவிக்கப் போவதாகவும் கூறினார். இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட, அந்த நடிகர் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ஆண்ட்ரியா அப்படி யாருடைய பெயரையும் சொல்லாமல், மவுனமாகி விட்டார்.
தற்போது சில படங்களில் நடித்து வருபவர், அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்படி அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதற்கு “மூட்” என்ற கேப்ஷனோடு “கத்திரிக்காய்” எமோஜியையும் ஆண்டியா போட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், கேரட், பீன்ஸ் உள்ளிட்ட சில காய்களின் பெயரை கமெண்டில் பதிவிட்டு, ஆண்ட்ரியாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
ஆண்ட்ரியா இந்த பதிவை எந்த மூடில் போட்டாரோ, ஆனால், அவருக்கு பதிலடியாக கமெண்ட் போடும் நெட்டிசன்கள் புல் மூடில் போடுகிறார்கள்.
இதனால் கடுப்பான ஆண்ட்ரியா அந்த புகைப்படத்தை நீக்கிவிட்டு, வேறு மாதிரியான புகைப்படத்தை போட்டுள்ளார்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...