விஷால் நடிப்பில், அறிமுக இயக்குநர் எம்.எஸ்.ஆனந்த் இயக்கியிருக்கும் ‘சக்ரா’ திரைப்படத்தை விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இதில் ஹீரோயினாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா நடிக்க, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
நாளை (பிப்.19) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற வழக்கின் காரணமாக படம் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில், வழக்கின் மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்ற போது, படத்தின் மீது இருந்த தடை விலகியது. இதன் மூலம் ‘சக்ரா’ திரைப்படம் அறிவித்ததுபோல் நாளை (பிப்.19) தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
’சக்ரா’ படம் மீதான தடை நீங்கி திட்டமிட்டபடி நாளை ரிலீஸாகும் என்ற அறிவிப்பு வெளியானதை விஷால் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...