தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் நடிகர் என்று தமிழ் சினிமாவில் பன்முகம் கொண்டவராக வலம் வருபவர் ஆர்.கே.சுரேஷ். இவர் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்தில் வில்லனாக நடித்து பாராட்டு பெற்றார். தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்து வந்தவர், தற்போது தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க ஹீரோவாக உருவெடுத்துள்ளார்.
சுரபி பிக்சர்ஸ் ஜோதி முருகன் மற்றும் தாய் மூவிஸ் விஜய்கார்த்திக் இணைத் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'வேட்டை நாய்' ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ராம்கி நடித்துள்ளார். கதாநாயகியாக சுபிக்சா நடித்துள்ளார்.
கணேஷ் சந்திர சேகரன் இசையமைக்க, முனீஸ் ஈஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை விஜய் கிருஷ்ணன் கவனிக்க, சண்டைக் காட்சிகளை சூப்பர் சுப்பராயனும், நடனத்தை காதல் கந்தாஸ் மாஸ்டரும் வடிவமைத்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனியிலுள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, துணைத் தலைவர் கதிரேசன், தயாரிப்பாளர்கள் சந்திரபபிரகாஷ் ஜெயின், அழகன் தமிழ்மணி, விடியல் ராஜு இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார் பவித்ரன் நடிகர்கள் ஏ.எல்.உதயா, போஸ் வெங்கட் ,சின்னத்திரை நடிகர் சங்கத்தலைவர் ரவிவர்மா, தயாரிப்பாளர் சங்க (கில்டு) செயலாளர் ஜாகுவார் தங்கம், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், “ஆர்.கே.சுரேஷைப் பார்க்கும்போது அவர் இன்னொரு ரஜினிகாந்த் போல வரப்போகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினியை ஹீரோவாக்கிய தயாரிப்பாளர் கலைஞானத்திடம், பைரவி படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்கி வந்தால் நான் அவரை வைத்து படம் இயக்கத் தயாராக இருக்கிறேன். நிச்சயம் ரஜினி போல பெரிய ஹீரோவாகி விடுவார் என்பது நிச்சயம். படத்தின் கதாநாயகி சுபிக்சா அழகாக இருக்கிறார் சென்னையிலேயே இப்படி ஒரு அன்னக்கிளியை வைத்துக்கொண்டு வெளியூர்களில் ஏன் அலைய வேண்டும்?” என்றார்.
நாயகன் ஆர்கே சுரேஷ் பேசுகையில், “இந்தப்படத்தின் இயக்குநர் ஜெய்சங்கர் படாத கஷ்டமே கிடையாது. இயக்குநர் பாலாவுக்கு அடுத்து என்னை செதுக்கியதில் இயக்குநர் ஜெய்சங்கருக்குத்தான் பங்கு உண்டு. இந்தப்படத்திற்கு வேட்டை நாய் என பைரவரின் பெயரை டைட்டிலாக வைக்கும்போதே ஒரு அதிர்வு ஏற்பட்டது.' புதியபாதை' படத்தில் வருவது போலத்தான் இந்த படத்தில் என் கதாபாத்திரமும். ராம்கி தற்போது திரையுலகில் பட்டும் படாமல் நடித்துவருகிறார். இந்தப்படத்திற்குப் பிறகு அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்பது உறுதி.
படங்களில் முத்தக் காட்சியில் நடிக்கவேண்டுமென்றால் முன்கூட்டியே என் மனைவியின் அனுமதியைப் பெற்றுவிடுவேன். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள லிப்லாக் முத்தக் காட்சியைப் பார்க்கும்போது எதுவும் வித்தியாசமாக, விரசமாகத் தெரியாது. படம் பார்க்கும் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தங்களை அதற்குள் பொருத்திக்கொள்வார்கள். தியேட்டர்களோ, ஓடிடி தளங்களோ எதுவானாலும் பெரிய படங்களுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை சிறிய படங்களுக்கும் கொடுக்க வேண்டும்.. சின்ன பட்ஜெட் படங்களால் தான் திரையுலகம் வாழ்கிறது.” என்றார்.
நடிகர் ராம்கி பேசுகையில், “இந்தப்படத்தின் இயக்குநர் ஜெய்சங்கர் கிட்டத்தட்ட இன்னொரு பாரதிராஜா போல. நான் நூறு படங்களில் நடித்துள்ளேன் எனச் சொன்னால் கூட, பரவாயில்லை சார் இன்னொரு டேக் போகலாம் என்பார். அவர் மனதில் வைத்திருந்த கதாபாத்திரத்தில் தனக்கு வேண்டிய மாதிரி என்னை மாற்றிக்கொண்டார். டப்பிங் பேசும் போதுதான் அந்த ஆச்சர்யத்தை நான் உணர்ந்தேன். கேமராமேன் முனீஸ் ஈஸ்வரன் என்னுடன் இணைந்து கிட்டத்தட்ட 2௦ டாக்குமென்ட்ரி படங்களுக்கு இணைந்து பணியாற்றியுள்ளார். ஆர்.கே.சுரேஷ் எந்த வேலையைக் கொடுத்தாலும் பொறுப்பாக செய்வார். ஒரு நடிகருக்கு இந்த பொறுப்பு ரொம்பவே முக்கியம். இதுவரை 100 படங்களில் நடித்துள்ளேன் ஆனால் ஒரு படத்தில் கூட, லிப்லாக் கிஸ் கொடுத்ததே இல்லை. இந்தப்படத்தில் ஹீரோவுக்கு மட்டும் வைத்துவிட்டு, எனக்கு இயக்குநர் ஓரவஞ்சனை செய்து விட்டார்.” என்றார்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...