ஐ கிரியேஷன்ஸ் மற்றும் பி.எஸ்.எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘No.6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு’. ‘தெரு நாய்கள்’, ‘படித்தவுடன் கிழித்துவிடவும்’, ‘கல்தா’ ஆகிய படங்களை இயக்கிய சே.ஹரி உத்ரா இயக்கும் இப்படத்தை டாக்டர்.சேவார தீனா, ப்ரீத்தி சங்கர், உஷா, சே.ஹரி உத்ரா ஆகியோர் தயாரிக்கின்றனர்.
தனது ஒவ்வொரு படத்திலும் சமூக பிரச்சினைகள் குறித்து அழுத்தமாக பேசும் இயக்குநர் சே.ஹரி உத்ரா, இப்படத்தின் மூலம் கால்பந்தாட்டத்தை கதைக்களமாக தேர்வு செய்தாலும், படத்தில் மிக முக்கியமான சமூக பிரச்சினைகள் குறித்தும் பேசுகிறாராம்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் தமிழகத்தின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்கள் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் விளையாட்டுத்துறையில் அரசியல் எப்படி நுழைகிறது, அதனால் திறமையான விளையாட்டு வீரர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், என்பதை அழுத்தமாக பேசியிருக்கும் இயக்குநர் படத்தின் பெரும்பாலான காட்சிகளை இரவில் படமாக்கியிருக்கிறார்.
சரத், ஐரா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக, பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் நரேந்திரன் வில்லனாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ‘அருவி’ புகழ் மதன், விஜய் முத்து, கஜராஜ், ஹரி, பீம்ஜி, ராசி, அழகப்பன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
வினோத் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஜே.அஷிமிர்ஷாக் இசையமைத்துள்ளார். கணேஷ்குமார் மற்றும் கிஷோர் படத்தொகுப்பு செய்ய, கோட்டி ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். சசிகுமார் நடனம் அமைக்க, குவைத் வித்யாசாகர், சே.ஹரி உத்ரா பாடல்கள் எழுதியுள்ளனர்.
பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ள ‘No.6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு’ வரும் மே மாதம் வெளியாக உள்ளது.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...