தமிழ் தொலைக்காட்சிகளில் தயாரிப்பாளராகவும், நடிகையாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றவர் ராதிகா. அதிலும், அவருடைய ‘சித்தி’ தொடர் திரைப்படங்களுக்கு இணையாக தயாரிக்கப்பட்டதோடு, அந்த தொடர் தமிழகம் மட்டும் இன்றி உலக தமிழகர்களின் பேவரைட் தொடராகவும் அமைந்தது.
சித்தி மட்டும் இன்றி ராதிகா தயாரித்த மற்றும் நடித்த பல தொடர்கள் மக்களிடன் பிரபலமான தொடர்களாக அமைந்த நிலையில், ’சித்தி 2’ என்ற தலைப்பில் கடந்த ஆண்டு புதிய தொடர் ஒன்றை ராதிகா தயாரித்து அதில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்தும் வந்தார்.
இதற்கிடையே, சீரியலில் இனி நடிக்கப் போவதில்லை என்று முடிவு எடுத்த நடிகை ராதிகா, அதே சமயம் தயாரிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன், என்று கூறியவர், ‘சித்தி 2’ சீரியலும் தொடர்ந்து ஒளிபரப்பாகும் என்றும், தனக்கு பதில் வேறு ஒரு முன்னணி நடிகை நடிப்பார், என்றும் தெரிவித்திருந்தார்.
இதனால், ’சித்தி 2’ சீரியலில் ராதிகாவுக்கு பதில் நடிக்கப் போகும் நடிகை யார்? என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில், ராதிகாவுக்கு பதில் சித்தி 2 சீரியலில் நடிகை மீனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், தேவையானி மற்றும் ரம்யா கிருஷ்ணனன் ஆகியோரது பெயர்களும் ‘சித்தி 2’ சீரியலில் ராதிகாவுக்கு நடிக்க இருக்கும் நடிகைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...