’கஹோ நா பியார் ஹை’, ‘பரதேஷ்’, ‘டால்’ உள்ளிட்ட பல மெஹா ஹிட் பாலிவுட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் கபிர் லால், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
ரொமான்ஸ் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்ஹ்டில் பிக் பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராம் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக பார்வதி நாயர் நடிக்கிறார்.
’உன் பார்வையில்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு டேராடூன், உத்ராகண்ட் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
ரொமான்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராம் சைக்லாஜிஸ்ட் ஆகவும், பார்வதி நாயர் தொழில்முனைவரகவும் நடிக்கிறார்கள். படத்தில் அவர்களின் கெமிஸ்ட்ரி அனைவரையும் கவரும்படி அமைந்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மராட்டி பெங்காலி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தமிழ் பதிப்பில் கணேஷ் வெங்கட்ராமன், பார்வதி நாயர் முதன்மை பாத்திரத்தில் நடிப்பது போல, மற்ற மொழிகளில் வெவ்வேறு நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள்.
இப்படம் குறித்து கணேஷ் வெங்கட்ராம் கூறுகையில், ’கஹோ நா பியார் ஹை’, ‘பரதேஷ்’, ‘வெல்கம் பேக்’ போன்ற பல படங்களில் கபிர் அவர்கள் ஒளிப்பதிவில் செய்த மேஜிக் கண்டு பிரமித்திருக்கிறேன். அவர் என்னிடம் கதை சொன்னபோது படு பரபரப்பான சுவாரஸ்யம் மிகுந்த கதையாக இருந்தது. கதாப்பாத்திரம் பல அடுக்குகள் கொண்டதாக இருந்தது. இம்மாதிரியான ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கவே காத்திருந்தேன். படம் அழகாக உருவாகி வருகிறது.” என்றார்.
பார்வதி நாயர் கூறுகையில், “நடிப்புக்கு சவால் தரும் கதாப்பத்திரம் என்னுடையது. என் முழு உழைப்பை தந்து நடித்திருக்கிறேன். கணேஷ் வெங்கட்ராம் மிகச்சிறந்த நடிகர். படப்பிடிப்பில் மிகவும் ஒத்துழைப்பாக இருந்தார். கபீர் அவர்கள் ஒவ்வொரு காட்சியையும் அமைக்கும் விதம் அதை படமாக்கும் விதம் பிரமிப்பானது.” என்றார்.
லவ்லி வேர்ல்ட் புரொடக்ஷன்ஸ் (Lovely World Production) சார்பில் அஜய் சிங் தயாரிக்கும் இப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாக உள்ளது.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...