சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியல் பெரும் வரவேற்பு பெற்றதோடு, அந்த சீரியலின் நாயகியாக சத்யா என்ற வேடத்தில் நடித்த நடிகை வாணி போஜனும் தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தார். அவருக்கு என்று தனி ரசிகர்கள் வட்டமே உருவாகியுள்ளது.
‘தெய்வமகள்’ சீரியலை தொடர்ந்து ‘லட்சுமி வந்தாச்சு’ மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இடம்பெற்று வந்த வாணி போஜன், சினிமாவில் கதாநாயகியாக எண்ட்ரியாவதற்காக சீரியல்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டதோடு, தனது தெய்வமகள் சீரியலை வெற்றிகரமாக முடித்தும் கொடுத்தார்.
இதை தொடர்ந்து சினிமாவில் அறிமுகமான வாணி போஜன், தனது முதல் படத்தில் பெரிய வெற்றி கொடுத்ததால் அவருக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வந்துக் கொண்டிருக்கின்றன. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக பல படங்களில் நடித்து வரும் வாணி போஜன், வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சினிமாவில் பிஸியாக இருக்கும் வாணி போஜன், மீண்டும் சீரியல் பக்கம் வரப்போகிறார். ஆனால், இது புதிய சீரியல் அல்ல, அவர் நடிப்பில் ஏற்கனவே ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியலின் மறு ஒளிபரப்பாகும். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற இந்த சீரியல், மீண்டும் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
இதனால், ‘தெய்வமகள்’ சீரியல் ரசிகர்களும், வாணி போஜனை தினமும் பார்க்க வேண்டும், என்று ஏங்கும் அவருடைய ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...