2019 ஆம் ஆண்டு வெளியான ’நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித் எச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு முடிவடைந்திருக்க வேண்டிய இப்படத்தின் படப்பிடிப்பு, கொரோனா பிரச்சனை காரணமாக இன்னும் முடிவடையாமல் இருப்பதோடு, படம் பற்றிய எந்த ஒரு அறிவிப்போ அல்லது போஸ்டர் மற்றும் டைடில் டிசைனை கூட தயாரிப்பு தரப்பு இன்னும் வெளியிடவில்லை.
இதனால் அஜித் ரசிகர்கள் ரொம்பவே அப்செட்டான நிலையில், பார்ப்பவர்களிடம் எல்லாம் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு அட்டகாசம் செய்ய தொடங்கி விட்டார்கள். இதனால், கோபமடைந்த அஜித், இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது ரசிகர்களை ஆஃப் செய்துவிட்டார்.
இந்த நிலையில், அப்டேட் கேட்டு அடம்பிடித்து வந்த அஜித் ரசிகர்களை ஆறுதல் படுத்தும் விதமாக அஜித் படம் பற்றிய புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால், இது அஜித்தின் புதிய படம் பற்றியது அல்ல, பழைய படம் பற்றியது.
2007 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘பில்லா’. ரஜினிகாந்த் நடித்த பில்லா படத்தின் ரீமேக்கான இப்படம் அஜித்தின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாகும். விஷ்ணுவர்தன் இயக்கிய இப்படத்தில் கதாநாயகிகளாக நயன்தாரா, நமீதா ஆகியோர் நடித்திருந்தார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
தற்போது, இப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. வரும் மார்ச் 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் ‘பில்லா’ ரிலீஸாகிறது.
அஜித்தின் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கிடைக்காததால் சோகத்தில் இருக்கும் அஜித் ரசிகர்களுக்கு, ‘பில்லா’ ரிலீஸ் அறிவிப்பு ஆறுதலாக அமைந்திருக்கிறது.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...