யோகி பாபு, நட்டி நட்ராஜ், மனிஷா யாதாவ் ஆகியோரது நடிப்பில் வெளியாகி வரவேற்பு பெற்ற ‘சண்டிமுனி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மில்கா செல்வகுமார். இயக்குநர் ராகவா லாரன்ஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், தனது இரண்டாவது படம் மூலமாக மீண்டும் யோகி பாபுவுடன் இணைகிறார்.
ஸ்ரீ கருணை ஆனந்தா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘கங்காதேவி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. யோகி பாபு முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில், முன்னணி நடிகை ஒருவர் ஹீரோயினாக நடிக்க உள்ளார். வில்லனாக ஸ்டண்ட் இயக்குநர் சூப்பர் சுப்பராயன் நடிக்க, சாம்ஸ், ஆர்த்தி கணேஷ் உள்ளிட்ட ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் நடிக்கிறார்கள்.
'காக்கா முட்டை' பட இயக்குநர் மணிகண்டனின் உதவியாளர் டி.சுரேஷ் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணிபுரிகிறார்.
படம் பற்றி இயக்குநர் மில்கா செல்வகுமார் கூறுகையில், “ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதை. அதுவும் கங்கா - தேவின்னு இரட்டை வேடம். குறிப்பிட்ட ஒரு விளையாட்டை மையப்படுத்தி, சஸ்பென்ஸ், திரில்லர், ஹாரர், காமெடி எல்லாமும் கலந்து திரைக்கதை உருவாக்கியிருக்கோம். 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் மாதிரி பூர்வஜென்ம கதையும் பின்னிப் பிணைஞ்சிருக்கும். குடும்பத்தோட சிரிச்சு ரசிக்கிற படமா இருக்கும்.” என்றார்.
மிகப்பெரிய இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்க இருக்கும் இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் எளிமையான பூஜையோடு நடைபெற்றது. இதில் யோகி பாபு கலந்துக் கொண்டார்.
படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கும் இப்படத்தின் கதாநாயகி உள்ளிட்ட மற்ற விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...