உலகின் பல்வேறு நாடுகளில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஹாலிவுட் திரைப்படமான ‘தி மார்க்ஸ்மேன்’ இந்திய மொழிகளில் வெளியாகிறது.
கைபா இன்க் நிறுவனத்தின் தலைவரான, திருச்சியை சேர்ந்த தமிழர் டெல் கே.கணேசன், முகா என்னும் காணொலி முறையை அறிமுகப்படுத்தி உலகத்தின் கவனத்தை ஈர்த்ததோடு, ‘டெவில்ஸ் நைட்’ மற்றும் ‘கிஸிதுமஸ் கூப்பன்’ போன்ற ஆங்கில திரைப்படங்களை தயாரித்திருப்பதோடு, அப்படங்கள் மூலம் தமிழ் நடிகர் நெப்போலியனை ஹாலிவுட் சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இவர் தான், உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஹாலிவுட் திரைப்படமான லியாம் நீசனின் ‘தி மார்க்ஸ்மேன்’-ஐ ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிடுகிறார்.
செலிப்ரிட்டி பிலிம் இண்டர்நேஷ்னல் மற்றும் யூ எஃப் ஓ மூவிஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து டெல் கணேசனின் கைபா பிலிம்ஸ் ‘தி மார்க்ஸ்மேன்’ திரைப்படத்தை வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடுகிறது.
ராபர்ட் லோரென்ஸ் இயக்கியுள்ள இத்திரைப்படம், பண்ணை உரிமையாளரான 60-வயது லியாம் நீசன், தாயை இழந்த 11 வயது சிறுவனை மெக்சிகோவின் போதை மருந்து கும்பலிடம் இருந்து எப்படி காப்பாற்றுகிறார், என்பதை விறுவிறுப்பான முறையில் அதிரடியாக விவரிக்கிறது.
இப்படத்தை இந்தியாவில் வெளியிடுவது குறித்து தயாரிப்பாளர் டெல் கணேசன் மற்றும் ஜி.பி.திமோதியோஸ் ஆகியோரிடம் கேட்ட போது, “இந்திய ரசிகர்கள் இப்படத்தை ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர். அவர்களுக்காக அவர்களின் மொழிகளிலேயே ‘தி மார்க்ஸ்மேன்’-ஐ நாங்கள் வெளியிடவிருக்கிறோம். இது ஒரு மிகச் சிறந்த திரைப்படம் என்பதால், மொழிகளை கடந்து ரசிகர்கள் பெரியளவில் ஆதரவு தருவார்கள் என நம்புகிறோம்,” என்றனர்.
கைபா பிலிம்ஸின் அஷ்வின் டி.கணேசன் (தி ஏடிஜி) கூறுகையில், “தனது முந்தைய படங்களின் வெற்றியின் காரணமாக லியாம் நீசன் உலகெங்கும் ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளார். அவரது புதிய திரைப்படத்தை இந்திய ரசிகர்களுக்கு விருந்தாக படைப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறோம்,” என்றார்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...