அய்யா சிவ சிவ சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே.எல்.உதயகுமார் தயாரித்து, கதை, திரைக்கதை எழுதி இயக்கும் படம் ‘ஒரு குடைக்குள்’.
பூவண்டன் தோப்பு என்னும் சாமி தோப்பில் ஶ்ரீமன் நாராயண வைகுண்டர் நிகழ்த்திய அற்புதங்களை வரலாறாக மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் உருவாகி வரும் இப்படத்தில் வைகுண்டராக ஆனந்த் நடிக்கிறார். பக்தையாக மேக்னாராஜ் நடிக்கிறார். அவதார சிறுவனாக சிவ தினேஷ் அறிமுகமாகிறார். இவர்களுடன் நிரோஷா, கருத்தம்மா ராஜஶ்ரீ, இளவரசு, இராஜேந்திரநாத், ரவிராகுல், சூசன் ஜார்ஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
தேனிசை தென்றல் தேவா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா தேவா அவர்களின் ஒலிக்கூடத்தில் பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது. இசையமைப்பாளர் தேவா பாடல்கள் குறுந்தகடை வெளியிட, படக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள்.
இப்படத்திற்கு இசையமைத்திருப்பதோடு, வைகுண்டரின் அதிசயங்களை விவரிக்கும் பாடல் ஒன்றையும் பாடியிருக்கும் தேவா, நிகழ்ச்சியில் பேசுகையில், ”வைகுண்டரின் அற்புதங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஒரு குடைக்குள்’ நிச்சயமாக வெற்றி பெறும். இந்த படத்தை குறுகிய காலத்தில் மிக சிறப்பாக இயக்கி தயாரித்திருக்கிறார் இயக்குநர் கே.எல்.உதயா. அவருக்கு உறுதுணையாக இருந்ததோடு, வசனமும் எழுதியிருக்கும் எஸ்.ஆர்.நிலா உள்ளிட்ட படக்குழுவினரை நான் மனமார பாராட்டுகிறேன்.
படத்தில் மூன்று பாடல்கள் உள்ளது. மூன்றுமே மிகச் சிறப்பாக இருக்கும். அனைத்து பாடல்களும் வைகுண்டரின் அதிசயங்களையும், அற்புதங்களையும் சொல்லும் வரிகள் கொண்ட பாடல்கள். இரண்டு பாகங்களாக இந்த படத்தை எடுத்துள்ளார்கள். இரண்டாம் பாகத்தில் நிறைய பாடல்கள் உள்ளது. இவர்களின் உழைப்பை பார்த்து மிரமித்திருக்கிறேன். அதற்கான பலனை வைகுண்டர் நிச்சயம் கொடுபார்.” என்றார்.
இயக்குநர் கே.எல்.உதயகுமார் பேசுகையில், “வைகுண்டரின் அற்புதங்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் முயற்சியாக தான் இந்த படம் இருக்கும். வைகுண்டரின் அதிசயங்களையும், அவருடைய அவதாரங்களையும், ஒவ்வொரு அவதாரத்திலும் அவர் நிகழ்த்திய அற்புதங்களையும் விரிவாக சொல்லியிருக்கிறோம். அதனால் தான், இரண்டு பாகங்களாக படத்தை எடுத்திருக்கிறோம். வைகுண்டரின் அவதார நாளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.
படத்தின் வசனம் எழுதிய எஸ்.ஆர்.நிலா பேசுகையில், “தேனிசை தென்றல் தேவா அவர்களை நாங்கள் தொலைவில் இருந்து பார்த்து ரசித்திருக்கிறோம். இந்த படம் மூலம் அவர் அருகில் செல்லும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது. அதற்கு வைகுண்டர் தான் காரணம். இந்த படத்தில் தேவா அவர்களின் குரலில் வைகுண்டரின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அவருடைய காந்த குரலில் உருவான அந்த பாடல் மக்களை நிச்சயம் ஈர்ப்பதோடு, அந்த பாடல் மூலம் தேனிசை தென்றலாக இருந்த அவர் புயலாக மாறிவிட்டார். அவருடைய இசையால் ‘ஒரு குடைக்குள்’ படத்திற்கு கூடுதல் சிறப்பும், பெருமையும் கிடைத்துள்ளது. அதனால், இசையமைப்பாளர் தேவா அவர்களுடம் எங்களுக்கு ஒரு அவதாரமாகவே தெரிகிறார்.” என்றார்.
எஸ்.ஆர்.நிலா வசனம் எழுதியிருக்கும் இப்படத்திற்கு வி.இராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஐயப்பன் கலையை நிர்மாணிக்க, லக்ஷ்மன் படத்தொகுப்பு செய்துள்ளார். தயாரிப்பு மேற்பார்வையை பி.வி.பாஸ்கரன் கவனிக்க, மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்.
அனைத்து பணிகளுடம் நிறைவடைந்து படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணி நடைபெற்று வரும் ‘ஒரு குடைக்குள்’ படத்தின் முதல் பாகம், வைகுண்டரின் அவதார நாளான வரும் மார்ச் 4 ஆம் தேதி வெளியாக உள்ளது.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...