33 சர்வதேச விருதுகளை வென்றுள்ள ‘என்றாவது ஒருநாள்’ திரைப்படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்வாகியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற 18 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளான நேற்று சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த ஆண்டு திரையிடப்பட்ட திரைப்படங்களில் சிறந்த திரைப்படமாக ‘என்றாவது ஒருநாள்’ தேர்வு செய்யப்பட்டது.
வெற்றி துரைசாமி எழுதி, இயக்கி தயாரித்திருக்கும் ‘என்றாவது ஒருநாள்’ படத்தில் ஹீரோவாக விதார்த்தும், ஹீரோயினாக ரம்யா நம்பீசனும் நடித்திருக்கிறார்கள்.
விழாவில் வழங்கப்பட்ட விருது, சான்று மற்றும் பணமுடிப்பு ஆகியவற்றை பெற்றுக் கொண்ட வெற்றி துரைசாமி பேசுகையில், ”இந்தப்படம் சிறந்தபடம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடிகை என வெவ்வேறு கேட்டகிரியில் இதுவரை 33 விருதுகளைப் பெற்றிருக்கிறது. இப்படி உலகத்திரைப்பட விழாக்களில் 33 சர்வதேச விருதுகளை வென்றிருந்தாலும் நம்ம சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழாவில் விருது பெற்றிருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவொரு நல்ல மோட்டிவேசன். நல்லபடங்களை தொடர்ந்து எடுப்பதற்கு இந்த விருது பெரும் முனைப்பாக இருக்கும். அனைவருக்கும் நன்றி” என்றார்.
மேலும் என்றாவது ஒருநாள் படத்தின் கேமராமேன் சண்முக சுந்தரத்திற்கு ஸ்பெசல் ஜுரி அவார்ட் கிடைத்தது. இந்த விருது கிடைத்த மகிழ்ச்சியை அவர் பகிர்ந்து கொள்ளும் போது, ”இந்தப்படத்தின் கதையோட்டத்தை கெடுக்காத அளவில் கேமராவொர்க் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்தப்படத்தின் இயக்குநர் வெற்றி துரைசாமி சார் காணுயிர் ஒளிப்படக் கலைஞர் (wildlife photographer) இருந்ததால் ஒளியின் மொழி அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து வேலை செய்ய வைத்தார். அந்த வகையில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...