பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல் என்பது மிக முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது. முதல் எப்பிசோட்டில் நடிகை ஓவிய தொடங்கி வைத்த காதல் நாடகம் சமீபத்தில் நிறைவடைந்த நான்காவது சீசன் வரை தொடர்ந்தது. அதிலும் மூன்றாவது சீசனில் அரங்கேறிய கவின் - லொஸ்லியாவின் காதல் நாடகம் தான் ரசிகர்களின் பேவரைட்டாக அமைந்ததோடு, அந்த சீசனுக்கு அதிகமான சுவாரஸ்யத்தையும் சேர்த்தது.
இப்படி நாடக காதலை வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சி உப்பேற்றப்பட்டாலும், நிகழ்ச்சி நிறைவு பெற்று போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினாலும், அவர்களைப் பற்றிய காதல் தகவல்கள் பல உலா வருகிறது.
இதற்கிடையே, சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் நான்காவது சீசனின் போட்டியாளர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு கொண்டாடி வருவதோடு, ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்தித்தும் கொள்கிறார்கள்.
இந்த நிலையில், ரம்யா பாண்டியனும், பாலாஜி முருகதாஸும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றுவதாக தகவல் வெளியாகிய நிலையில், இருவரும் ஒன்றாக சேர்ந்த கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டுள்ளார்கள். இதனால், இவர்களுக்கு இடையே காதல் இருக்கலாம், என்று நெட்டிசன்கள் கொளுத்தி போட தொடங்கியிருக்கிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்,
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...