Latest News :

”என்னை ஏமாற்றி பணம் பறிக்க பார்க்கிறார்கள்” - நடிகர் விமல் அறிக்கை
Thursday March-04 2021

திரையரங்க உரிமையாளரான திருநாவுக்கரசு என்பவர், நடிகர் விமல் மீது பண மோசடி வழக்கு கூறியதோடு, இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அவரது புகார் கடிதம் செய்தியாக வெளியான நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள நடிகர் விமல், தன்னை ஏமாற்றி பணம் பறிக்க பார்க்கிறார்கள், என்று தெரிவித்துள்ளார்.

 

நடிகர் விமல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”என்னை பற்றிய தவறான செய்திகளை சமூக ஊடகத்திலும் நாளிதழ்களிலும் வந்திருப்பவற்றை படித்தேன். அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. என் வளர்ச்சியை பொறுக்காத சிலர் இது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். 

 

யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் திநாவுக்கரசு என்பவர் என்மீது இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார். திருநாவுக்கரசுக்கும் எனக்கும் எந்தவித நேரடித் தொடர்போ பணம் பரிமாற்றமோ இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்வதோடு, அவர் மீது இது தொடர்பாக மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பரிப்பதே ஆகும்.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

7363

”தாத்தா சம்பாதித்ததை பேரன் ஒரே படத்தில் இழந்துவிட்டார்”! - சிவாஜி வீடு ஜப்தி பற்றி இயக்குநர் பேரரசு பேச்சு
Wednesday March-05 2025

புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

மீண்டும் இணைந்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் - இயக்குநர் ராஜு சரவணன்!
Tuesday March-04 2025

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...

Recent Gallery