மாஸ் கமர்ஷியல் கிங்கான இயக்குநர் லிங்குசாமி, தெலுங்கு சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நாயகனான ராம் பொதினேனி கூட்டணியில் புதிய படம் உருவாகிறது. இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான நிலையில், தற்போது படத்தின் கதாநாயகி பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, பிரபல இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி இப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இதனை இன்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஸ்டைலீஷ் ஆக்ஷன் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. தற்காலிகமாக ’ரபொ19’ (RAPO19) என்று அழைக்கப்படும், இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில், சித்தூரி ஸ்ரீனிவாசா தனது ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனத்தின் 6 வது தயாரிப்பாக தயாரிக்கிறார்.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...