தமிழ் சினிமாவில் நடிகை மற்றும் பாடகியாக வலம் வரும் ஆண்ட்ரியா, சர்ச்சை நாயகியாகவும் வலம் வந்துக் கொண்டிருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் மற்றும் கசமுசா சர்ச்சையில் சிக்கியவர், நடிகர் ஒருவரால் உடல் மற்றும் மன ரீதியாக தான் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக, அவரே கூறினார்.
இந்த நிலையில், நடிகர் ஒருவருக்காக நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக நின்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த நடிகர் வேறு யாருமல்ல மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ’சைக்கோ’ படத்தில் சைக்கோவாக நடித்த ராஜ்குமார் பிச்சுமணி தான்.
’சைக்கோ’ படத்தை தொடர்ந்து ‘பிசாசு 2’ படத்தை மிஷ்கின் இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக சைக்கோ ராஜ்குமார் பிச்சுமணி நடிக்க, ஹீரோயினாக ஆண்ட்ரியா நடிக்கிறார். இவர்களுடன் சிறப்பு தோற்றம் ஒன்றில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.
தற்போது படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியா ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்திருக்கிறாராம். அதாவது, ஹீரோ ராஜ்குமார் பிச்சுமணி முன்பு அவர் நிர்வாணமாக நிற்பது போல அந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளதாம்.
கதைக்கு மிக முக்கிய தேவை என்பதால், அந்த நிர்வாண காட்சியில் நடிக்க சம்மதித்த ஆண்ட்ரியா, அதற்காக பெரும் தொகையை சம்பளமாக பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
‘சைக்கோ’ படத்தின் ஒரு காட்சியில் ராஜ்குமார் பிச்சுமணி நிர்வாணமாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...