தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி சரத்குமார், தற்போது தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், சம்பளத்தை உயர்த்தி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே சமீபத்தில் தனது பிறந்தநாளை சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் கொண்டாடிய வரலட்சுமி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளுக்கு பொம்மைகள், சாக்லெட்கள், கேக் போன்றவற்ற வழங்கி அவர்களுடன் பிறந்தநாளை கொண்டாடினார்.
அப்போது, வரலட்சுமியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்கையில், நிருபர் ஒருவர், “திருமணம் என்பது பெண்களுக்கு அவசியமான ஒன்றா? அது ஒரு கொள்கையா?, பெண்கள் என்றால் திருமணம் செய்ய வேண்டும் என்று ஏதாவது உள்ளதா? பின்னர் ஏன் இப்படி ஒரு கேள்வியை தொடர்ந்து எழுப்பி கேட்கிறீர்கள். ஆண்களுக்கு சில கொள்கைகள் இருக்கும் போது பெண்களுக்கு மட்டும் கொள்கைகள் இருக்கக் கூடாதா?” என்று கூறியவர், கல்யாணம் எப்போது என்கிற கேவலமான கேள்வியை மட்டும் யாரிடமும் கேட்காதீர்கள், என்றும் தெரிவித்தார்.
திருமணம் பற்றிய கேள்விக்கு வரலட்சுமியின் கோபமும், பதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அவர் காதலில் தோல்வியடைந்ததால் விரக்தியடைந்து திருமணமே வேண்டாம், என்ற எண்ணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கர்நாடக கிரிக்கெட் வீரர் ஒருவருடன் அவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு அதுவும் தோல்வியில் முடிந்ததால் தற்போது வரலட்சுமி பெருத்த சோகத்தில் இருப்பதாகவும், அதனால் தான் அவர் இப்படி பதில் அளித்துள்ளார் என்றும் கோலிவுட்டில் பேச்சு அடுபடுகிறது.
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...
நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...