நடிகர் மற்றும் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் வலம் வரும் விஷ்ணு விஷால், ‘எஃப்.ஐ.ஆர்’ என்ற படத்தை தயாரித்து நடித்துள்ளார். மனு ஆனந்த் இயக்கியிருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
‘எஃப்.ஐ.ஆர்’ படத்தை தொடர்ந்து ‘மோகன்தாஸ்’ என்ற படத்தை தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மூலமாக தயாரித்து நடிக்கும் விஷ்ணு விஷால், படத்தின் அறிமுக டீசரை கொரோனா ஊரடங்கு சமயத்தில் வெளியிட்டார். அப்போதை வைரலாகி வரவேற்பு பெற்ற இப்படத்தின் டீசர் பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியது.
முரளி கார்த்திக் இயக்கும் ‘மோகன்தாஸ்’ எமோஷனல் த்ரில்லர் பாணியிலான கதையாகும். இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். வித்தியாசமான கதைகள் வந்தால் தமிழில் நடிக்கும் இந்திரஜித் சுகுமாரன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களுடன் பூர்ணிமா பாக்யராஜ், கருணாகரன், அக்ஷய் ராதாகிருஷ்ணன், ஷாரிக், லாலு, பிரகாஷ் ராகவன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில், ‘மோகன்தாஸ்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது. புதிய படத்தை துவக்கியுள்ள விஷ்ணு விஷாலுக்கு திரையுலக நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...
நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...