‘கொலைகாரன்’ படத்திற்குப் பிறகு விஜய் ஆண்டனியில் வெளியாக உள்ல படம் ‘கோடியில் ஒருவன்’. செந்தூர் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் டி.டி.ராஜா தயாரித்திருக்கும் இப்படத்தை ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். ஆத்மீக கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்க, என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகளில் தீவிரம் காட்டி வரும் ‘கோடியில் ஒருவன்’ படக்குழு நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
படம் குறித்து பகிர்ந்துக் கொண்ட விஜய் ஆண்டனி, “கொலைகாரன் படத்திற்கு பிறகு இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் அருமையான படத்தை தந்துள்ளார். எதிர்காலத்தில் இவருடன் இன்னும் பல படங்களில் நடிப்பேன். ஆத்மீகாவுடன் நடித்ததில் மகிழ்ச்சி. அவர் ஒரு திறமையான நடிகை கூட. நிவாஸ் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. சமீபத்தில் வெளியான மெலோடி பாடல் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.” என்று நெகிழ்ச்சியடைந்தார்.
நடிகை ஆத்மீகா கூறுகையில், “இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோன காலகட்டத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த அடுத்த தருணமே இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விட்டார்கள். படப்பிடிப்பை நம்பி வாழும் ஊழியர்களையும் ,தொழிலாளர்களையும் மனதில் வைத்து விஜய் ஆண்டனி நடிக்க ஒப்புக்கொண்டு நடித்தார். இவர் ஒரு ரியல் லைஃப் ஹீரோ. இப்படத்தில் போஸ்டர்களில் ஹீரோவுக்கு இணையாக என் பெயரையும் சேர்த்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.” என்றார்.
இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன் கூறுகையில், “’கோடியில் ஒருவன்’ படத்தில் ஆண்டனி டியூசன் மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மெட்ரோ படத்தை பார்த்து எனக்கு இந்த படத்தை இயக்க வாய்ப்பளித்தார். இந்த படத்தில் அரசியலால் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும், சிக்கலைகளையும் தீர்க்கும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அரசியல் பேசும் படமாக இருந்தாலும், முழுக்க முழுக்க ஒரு ஜனரஞ்சகமான விறுவிறுப்பான படமாக இருக்கும்.” என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறுகையில், “’கோடியில் ஒருவன்’ பாசிட்டிவான படத்தலைப்பு, விஜய் ஆண்டனிக்கு அமைந்துள்ளது. ஆனந்த கிருஷ்ணன் திறமையான இயக்குநர். இந்த படத்தை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி. கொரோனா காலகட்டத்திலும் அனைவரின் ஒத்துழைப்போடும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது. இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை விஜய் ஆண்டனி மேற்கொள்கிறார் .முதன்முதலாக எடிட்டராக அவதாரம் எடுத்துள்ளார். படத்தின் முதல் பாதியை அருமையாக வந்துள்ளது. இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறோம். விஜய் ஆண்டனி கடுமையான உழைப்பாளி. படப்பிடிப்பு நாடகக்கும்போதே ஷூட் முடித்ததும் மறுபுறம் எடிட்டிங் வேலைகளை கவனிப்பார்.” என்றார்.
ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தை இன்ஃபினிட்டி பிலிம் வென்சர்ஸ் சார்பில் டாக்டர்.தனஞ்செயன் வெளியிடுகிறார். இணை தயாரிப்பாளர்களாக கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், பி.பிரதீப், பங்காஜ் போஹ்ரா, விக்ரம் குமார் ஆகியோர் பணியாற்றியுள்ளார்கள்.
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...
நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...