டிக் டாக் சமூக செயலியில் ஆபாசமான வீடியோக்களை வெளியிட்டு வந்த இலக்கியா என்ற பெண், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்த போது பலர் தன்னை படுக்கைக்கு அழைத்து பயன்படுத்திக் கொண்டதாக, சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவருடைய இந்த பதிவுக்கு பிறகு அவர் பிரபலமடைந்ததோடு, பல ஊடகங்களின் பேட்டிகளிலும் பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில், பல சினிமா வாய்ப்புகள் இலக்கியாவை தேடிச் செல்ல இறுதியாக ’நீ சுடத்தான் வந்தியா?’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அருண்குமார் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் இலக்கியா ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர்களுடன் தங்கதுரை, கொட்டாச்சி, நெல்லை சிவா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கே.துரைராஜ் இப்படத்தை இயக்கி படத்தொகுப்பு செய்திருக்கிறார். துரைராஜன் இசையமைக்க, செல்வ கணேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சுதாகர், கானா சேது, லோகேஷ், அருண்குமார் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
இப்படத்தில் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் இலக்கியா, அருண்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள். சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பேரரசு, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே.ராஜான் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் திரையிடப்பட்டது. இரண்டிலுமே இலக்கியா தான் நிறைந்திருந்ததோடு, அவர் காட்டிய கவர்ச்சி அரங்கையே அதிர வைத்தது.
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், டிரைலரை பார்த்த போது, இது ஒரு மாதிரியான படமாக இருக்குமோ, என்று தோன்றியது. ஆனால் தம்பி பேரரசு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இருக்கும், என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய தாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் ராஜன் சாருக்கு தோன்றியது தான் அனைவருக்கும் தோன்றியிருக்கும், காரணம் இலக்கியா அந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். நீ சுடத்தான் வந்தியா? என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். எத்தனை பேர் இலக்கியாவால் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள் என்பது தெரியவில்லை. நான் கூட இது உண்மையாக இருக்குமா, என்று நினைத்தேன். ஆனால், இங்கு வந்து பார்த்த போது தான் தெரிந்தது அனைத்தும் உண்மை தான் என்று. இயக்குநர் பேசும்போது பயந்து பயந்து பேசுவது போல் இருந்தது. பயப்பட வேண்டாம். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படம் போல இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.
படத்தின் ஹீரோவும், தயாரிப்பாளருமான அருண்குமார் பேசுகையில், “படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு இதை ஆபாச படம் என்று நினைக்க வேண்டாம். பாடல் காட்சிகளில் மட்டும் தான் இலக்கிய் கவர்ச்சியான உடையில் தோன்றியிருக்கிறார். அது படத்தின் வியாபாரத்திற்காக செய்யப்பட்டது. அந்த பெருமைகள் அனைத்தும் இலக்கியாவுக்கு தான் சேரும். மற்றபடி படம் நல்ல சஸ்பென்ஸ் திரில்லர் படமாகத்தான் இருக்கும்.” என்றார்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...