தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான எஸ்.பி.ஜனநாதன் தனது திரைப்படங்கள் மூலம் முற்போக்கு கருத்துக்களை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வல்லவர். அவர் இயக்கிய ’இயற்கை’, ‘ஈ’, ’பேராண்மை’, ‘புறம்போக்கு எனும் பொதுவுடமை’ ஆகிய படங்களை இயக்கியவர், தற்போது விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார்.
‘லாபம்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் இறுதிக்கட்ட படத்தொகுப்பு பணியில் இயக்குநர் ஜனநாதன் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று (மார்ச் 12) படத்தொகுப்பு பணியில் இருந்தவர், மதிய உணவுக்காக வீட்டுக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் படத்தொகுப்பு பணிக்கு திரும்பாததால், அவருடைய உதவியார்கள் அவருடைய வீட்டுக்கு சென்று பார்த்த போது அவர் விட்டில் சுயநினைவின்றி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை தீவிர பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் பரிசோதித்து வருகிறார்கள். அவருடைய நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து இயக்குநர் அமீர், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் பலர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...
நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...