திடீர் உடல் நிலை பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் சிகிச்சை பலன் இன்றி இன்று மரணம் அடைந்தார்.
2003 ஆம் ஆண்டு வெளியான ‘இயற்கை’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான எஸ்.பி.ஜனநாதன், ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ ஆகிய படங்களை இயக்கி ஜனநாதன், தற்போது விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ‘லாபம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படத்தின் படத்தொகுப்பு பணியில் ஈடுபட்டிருந்த இயக்குநர் ஜனநாதன், தனது வீட்டில் திடீரென்று மயக்கமடைந்துள்ளார். சுயநினைவின்றி இருந்த அவரை உதவி இயக்குநர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சுமார் 10 மணியளவில் சிகிச்சை பலன் இன்றி இயக்குநர் ஜனநாதன் இறந்துவிட்டார்.
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் 18 ஆண்டுகளில் 5 திரைப்படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும், அவருடைய அனைத்து படங்களும் புரட்சிகரமான கருத்துக்களை பேசும் படங்களாகும்.
தஞ்சாவூர் மாவட்டம் வடசேரியில் 1959-ம் ஆண்டு மே 7 ஆம் தேதி பிறந்த எஸ்.பி.ஜனநாதன் திருமணம் செய்து கொள்ளவே இல்லை.
எஸ்.பி.ஜனநாதனின் மறைவு தமிழ்த் திரையுலகினருக்கே பேரிழப்பு. சென்னையில் வைக்கப்பட்டுள்ள அவருடைய உடலுக்கு திரையுலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...
நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...