Latest News :

ஹாலிவுட் கதாநாயகியுடன் ஜோடி போடும் தேஜ்!
Sunday March-14 2021

பிரம்மாண்ட தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தயாரித்த ‘காதலுக்கு மரணமில்லை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் தேஜ். அப்படத்தை தொடர்ந்து ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘காந்தம்’ ஆகிய படங்களில் நடித்தவர், தற்போது ‘ரீவைண்ட்’ என்ற படத்தில் நடித்திருப்பதோடு, படத்தை இயக்கி தயாரிக்கவும் செய்திருக்கிறார்.

 

தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள ‘ரீவைண்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 16 ஆம் தேதி வெளியாக உள்ளது.

 

’ரீவைண்ட்’ படத்தை தொடர்ந்து இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாகும் ஃபேன் இந்தியா படம் ஒன்றையும் இயக்கி நடிக்கவுள்ள தேஜ், அப்படத்திற்கு ‘காட்’ என்று தலைப்பு வைத்துள்ளார். ‘குளோரி ஆஃப் டான்’ என்பதற்கான சுருக்கம் தான் காட்.

 

சுமார் ரூ.40 கோடியில் உருவாக உள்ள இப்படம் குறித்து தேஜ் கூறுகையில், “நான்கு வருட இடைவெளியில் தமிழ் மற்றும் கன்னடத்தில் ’ரீவைண்ட்’ என்கிற பெயரில் இருமொழி படம் ஒன்றை தயாரித்துள்ளேன். கர்நாடகாவில் ஏப்ரல் 16 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. தமிழில் இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்து ஆலோசித்து வருகிறோம்.

 

இந்த டைட்டிலை தான், சிம்பு நடித்துவரும் மாநாடு படத்தின் கன்னட ரீமேக்கிற்கு டைட்டிலாக அறிவித்தார்கள். ஆனால் அதே டைட்டிலை, நான் ஏற்கனவே பதிவு செய்து, சென்சார் சான்றிதழ் வாங்கி, ரிலீஸ் வரை வந்துவிட்டேன் என்கிற தகவல், தெரிந்ததும் விட்டுக்கொடுத்து விலகி விட்டார்கள். ஒரு பத்திரிக்கை நிருபர், கார்ப்பரேட் மாஃபியா ஒன்றை எதிர்த்து டெக்னாலஜி உதவியுடன் போராடுகிறார். இது மனிதனின் மூளை சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான அம்சத்தை மையமாக கொண்ட சயின்டிஃபிக் ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ளது. 

 

தற்போது 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இந்தியா முழுமைக்குமான படம் (Pan India Movie) ஒன்றை நடித்து இயக்கவுள்ளேன்.

 

கன்னடத்தில் கே.ஜி.எஃப் படம் வெளியாகி அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்தியா முழுமைக்குமான படம் (Pan India Movie) என்பது ஒரு புதிய ட்ரெண்ட் ஆக மாறியுள்ளது. அதுமட்டுமல்ல அனைத்து மொழிகளுக்கும் செட்டாக கூடிய கதையும் டைட்டிலும் எங்களுக்கு இயல்பாகவே அமைந்துவிட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பில்லா படத்தை தாண்டிய ஒரு படமாக, அதாவது 2021ல் பில்லா போன்ற ஒரு டான் இருந்தால் அவன் எப்படி இருப்பான் என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. 

 

இந்த படத்தின் நட்சத்திர தேர்வு நடைபெற்று வருகிறது. கதாநாயகியாக ஹாலிவுட் கதாநாயகி ஒருவரை நடிக்க வைக்க பேசி வருகிறோம். தற்போது கன்னடத்தில் ’ராமாச்சாரி 2.O’ என்கிற படத்தில் நடித்து வருகிறேன். அதை முடித்துவிட்டு, விரைவில் இந்த படத்தை துவங்க உள்ளேன்.” என்றார்.

Related News

7393

”’தண்டேல்’ படத்திற்காக என்னை மாற்றிக் கொண்டேன்” - நடிகர் நாக சைதன்யா
Friday January-31 2025

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...

விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ‘தருணம்’! - ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகிறது
Wednesday January-29 2025

சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள  "தருணம்"  திரைப்படம், வரும்  ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான  திரையரங்குகளில் உலகமெங்கும்  வெளியாகிறது...

ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘மை லார்ட்’ படத்தின் முதல் பார்வை வெளியானது!
Wednesday January-29 2025

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...

Recent Gallery