விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளிலும் இத்தொடர் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
குடும்பம் மற்றும் சகோதர ஒற்றுமையை மையப்படுத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் நான்காவது சகோதரருக்கான ஜோடியான வைஷாலி தனிகா நடித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இவர் இத்தொடரில் நடிக்க தொடங்கிய நிலையில், திடீரென்று இவர் தொடரில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தீபிகா என்பவர் நடிக்க தொடங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் இருந்து விலகியது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை வைஷாலி, எல்லாரும் ஏன் பாண்டியன் ஸ்டோர் சீரியலை விட்டு விலகிட்டீங்கன்னு கேக்குறாங்க. உண்மையிலேயே அதுக்கான காரணம் தெரியல. என் கிட்ட யாரும் எதுவும் சொல்லல. இதுக்கு மேல நான் அந்த காரணத்தை தெரிஞ்சுக்கவும் விரும்பல. ரொம்ப சின்னதா இருந்தாலும் ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்துக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி, என்று தெரிவித்துள்ளர்.
சீரியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் தனக்கு தெரியவில்லை, என்று நடிகை வைஷாலி கூறியிருந்தாலும், இதற்கு பின்னணியில் மீ டூ விவகாரம் இருக்கலாம், என்ற பேச்சு அடிபடுகிறது.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...