வைல்ட் கார்ட் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சுஜா வாருணி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவருமே நடிக்கிறார்கள், என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை எட்ட இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், சுஜா வாருணி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். சினேகனுக்கு கடுமையான போட்டியாளராக திகழ்ந்த இவருக்கு, மக்களி ஓட்டு குறைவாக கிடைத்ததாலும், சினேகனின் மதிப்பெண்கள் கிடைக்காததாலும் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ள சுஜா வாருணி, ”பிரதிநிதி கமல்ஹாசனுக்கும், பிக் பாஸ் குழுவுக்கும் எனது நன்றி தெரிவிக்கிறேன். என்னை பற்றி வந்த கிண்டல், மீம்கள் செய்தது எனக்கு ஊக்கத்தை தந்தது. அன்பு காட்டியவர்களுக்கு நன்றி. அதை நான் விளையாட்டாகவே எடுத்துக் கொள்கிறேன். உங்கள் முயற்சிகளுக்கு எனது பாராட்டுகள்.
சிலர் என்னை கடும் உழைப்பாளி எனவும், சிலர் சுயநலவாதி என்றும் கூறினர். இது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி தான். அதில், சுயநலத்துடன் இருப்பதில் என்ன தவறு. பட்டி, ஹரிஷைத் தவிர எல்லோருமே நடிக்கிறார்கள். நான் நானாகவே எப்போதுமே இருந்திருக்கிறேன்.
கமல் சார் எனக்கு ஊக்கம் கொடுத்து பேசும் போதே நான் வெற்றி பெற்றுவிட்டேன். அது எனக்கு சிறப்பான தருணம். மீண்டும் இறுதி நிகழ்ச்சியில் உங்களை சந்திக்க வருவதில் மகிழ்ச்சி. உண்மை வெல்லும் என நம்பிக்கை உண்டு. ஓட்டு போட்ட எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...