உணவு வழங்கும் விவசாயிகளின் பெருமையையும், தற்போதைய காலக்கட்டத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘உழைக்கும் கைகள்’.
கே.எம்பையர் மூவிஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் கே.சூர்யா தயாரிக்கும் இப்படத்தில் நாமக்கல் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிக்க, கிரண்மயி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குநர் செந்தில்நாதன், ஜாக்குவார் தங்கம், போண்டா மணி, டாக்டர் ஷர்மிளா, மோகன், விஜயலட்சுமி, தமிழ்நாடு மேடை நடன கலைஞர்கள் சங்க தலைவர் பிரேம்நாத், குணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து, பல ஹிட் பாடல்களை கொடுத்த சங்கர் கணேஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். எம்.ஜி.ஆர் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜாக்குவார் தங்கம் இப்படத்தின் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
படம் குறித்து இயக்குநர்கள் செந்தில்நாதன் - நாமக்கல் எம்.ஜி.ஆர் கூறுகையில், “விவசாயிகளின் வாழ்வுரிமை, தொழில் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக தனது திரைப்படங்கள் மூலம் எம்.ஜி.ஆர் குரல் கொடுத்து வந்தார். அதன் பிறகு யாரும் அப்படி குரல் கொடுக்கவில்லை. 50 வருடங்களுக்குப் பிறகு விவசாயிகளின் வாழ்வியலைக் கூறும் படமாகவும், நகைச்சுவை, ஆக்ஷன் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாகவும் ‘உழைக்கும் கைகள்’ உருவாகியுள்ளது.” என்றனர்.
தனது இலட்சிய படமாக இப்படத்தை தயாரித்துள்ள எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான டாக்டர் கே.சூர்யா படம் பற்றி கூறுகையில், “காலத்தால் அழியாத காவிய படங்களில் நடித்து சாதனை படைத்து அரசியல் களம் கண்டு மக்களின் ஏகோபித்த ஆதரவினால் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து நல்லாட்சி தந்தவர் காலம் சென்ற மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் என்றால் அது மிகையாகாது. அவரை வைத்து படம் தயாரிக்கவில்லையே என்று பலரும் ஏக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன். மக்கள் திலகத்தை போன்றே இருக்கும் நாமக்கல் எம்.ஜி.ஆர்-ஐ வைத்து படம் தயாரித்து என் ஏக்கத்தையும், இலட்சியத்தையும் இந்த படத்தின் மூலமாக நிறைவேற்றிக் கொண்டேன்.” என்றார்.
தென்காசி, குற்றாலம், சேலம், நாமக்கல், தேனி, அல்லிநகரம், தேவாரம், போடிநாயக்கனூர், ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள ‘உழைக்கும் கைகள்’ படம் விரைவில் வெளியாக உள்ளது.
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...
நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...