ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அஸ்வின். இவர் சில விளம்பர படங்களில் நடித்ததோடு, சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும் நடித்திருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் பிரபலமாகியிருக்கும் அஸ்வினுக்கு பெண் ரசிகைகள் அதிகரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உணவகம் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அஸ்வினை, பார்ப்பதற்காகவும், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காகவும் ஏராளமான இளம் பெண்கள் அங்கு குவிந்தனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும், அஸ்வினை பார்த்து, அவருடன் செல்பி எடுக்காமல் செல்ல மாட்டோம், என்று அடம்பிடித்து அந்த இடத்தில் பல இளம் பெண்கள் காத்துக் கொண்டிருந்ததோடு, “அஸ்வின்...அஸ்வின்...” என்று கத்திக்கொண்டும் இருந்தனர். இதில் சில பெண்கள் அஸ்வினை பார்த்ததோடு, அவர் முன்பு நடனம் ஆடுகிறேன், பாட்டு பாடுகிறேன், என்று அவரை படாதபாடு படுத்த, மனுஷன் அந்த இடத்தில் இருந்து கோமாளியை போல தெறித்து ஒடிவிட்டார்.
இதோ அந்த தெறி வீடியோ,
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...