தமிழ் சினிமாவின் முக்கியமான கமர்ஷியல் திரைப்பட இயக்குநர்களில் ஏ.வெங்கடேஷும் ஒருவர். பல கமர்ஷியல் வெற்றி படங்களை இயக்கியிருக்கும் ஏ.வெங்கடேஷ் இயக்கும் புதிய படத்திற்கு ‘ரஜினி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘ஓரம்போ’, ‘வாத்தியார்’ போன்ற வெற்றி படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் இப்படத்தை தயாரிக்கிறார். இவர் ‘பாம்பாட்டம்’ என்ற படத்தையும் மிக பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறார்.
அர்ஜுன் நடிப்பில், ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘வாத்தியார்’ படத்தை தயாரித்த பழனிவேல், 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் ஏ.வெங்கடேஷுடன் இணைந்துள்ளார்.
விஜய் சத்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக மும்பையை சேர்ந்த கைநாட் அரோரா நடிக்கிறார். முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
மனோ வி.நாராயணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைக்கிறார். அகில் பாபு அரவிந்த் வசனம் எழுத, ஏ.பழனிவேல் கலையை நிர்மாணிக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
படம் பற்றி இயக்குநர் ஏ.வெங்கடேஷ் கூறுகையில், “திரில்லர், ஆக்க்ஷன் கலந்த ஒரு வித்தியாசமா படமாக இதை உருவாக்க உள்ளேன். படத்தின் நாயகன் விஜய் சத்யா எதிர்பாராத விதமாக ஒரு நாள் இரவில் ஒரு விபத்தினால் பல சிக்கல்களை சந்திக்கிறார், அது என்ன மாதிரியான சிக்கல்கள் அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் படத்தின் திரைக்கதை. அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நாய் ஒன்றும் நடிக்கிறது. படத்தில் நாயகனின் பெயர் ரஜினி பிரியன் அவரை நண்பர்கள் செல்லமாக ரஜினி என்று அழைப்பார்கள், அதனால் தான் படத்திற்கு ’ரஜினி’ என்று பெயர் வைத்துள்ளேன்.” என்றார்.
இன்று பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற உள்ளது.
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...
நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...