தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்த நான்காவது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிய சுவாரஸ்யங்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததால், ஐந்தாவது சீசனில் பல முக்கிய பிரபலங்களை போட்டியாளர்களாக களம் இறக்க பிக் பாஸ் குழு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், ஐந்தாவது சீசனை தொகுத்து வழங்க மாட்டார், என்று கூறப்படுகிறது. தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள கமல்ஹாசனின், மக்கள் நீதி மய்யம் கட்சி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதால், கமல்ஹாசனின் முழு கவனமும் அரசியல் பக்கம் இருக்கிறது. எனவே அவர் பிக் பாஸின் ஐந்தாவது சீசனை தொகுத்து வழங்கப் போவதில்லை, என்று கூறப்படுகிறது.
அதே சமயம், விஜய் தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சியாக பிக் பாஸ் இருப்பதால், எக்காரணம் கொண்டு நிகழ்ச்சியை ரத்து செய்யவோ அல்லது ஒத்திவைக்கவோ விரும்பாத சேனல் தரப்பு, ஐந்தாவது சீசனுக்கு வேறு ஒரு நடிகரை தொகுப்பாளராக கொண்டு நடத்த முடிவு செய்துள்ளதாம்.
அதன்படி, பிக் பாஸ் ஐந்தாவது சீசனை தொகுத்து வழங்க சிலம்பரசனிடம் பிக் பாஸ் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...
நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...