விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘லாபம்’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இறந்ததால், ‘லாபம்’ படம் என்னவாகும்?, எப்போது வெளியாகும்? என்ற கேள்விகள் எழுந்த நிலையில், ’லாபம்’ படத்தை தயாரிக்கும் 7சி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் படங்களில் தொனிக்கும் கருத்துகளுக்கும், ஒலிக்கும் போராட்டக் குரலுக்கும் என்றைக்கும் முடிவு கிடையாது. அவருடைய படங்களில் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் யாவும் காலத்துக்கும் பொருந்திப் போகக்கூடியவை. அப்படிப்பட்ட படைப்புகளில் ஒன்று தான், எங்கள் நிறுவனமும் விஜய் சேதுபதி புரொடக்ஷனும் இணைந்து தயாரித்து விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லாபம்’ திரைப்படம்.
இந்த படம் திரைக்கு வருவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் மும்மரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த தருணத்தில் எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் மறைவு மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது.
அதே சமயம், எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் ‘லாபம்’ படத்தின் அனைத்துப் பணிகளையும் முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார். எஞ்சி இருக்கும் சில பணிகளை எங்கள் படக்குழுவினரே முடித்து வெளியிடவுள்ளீம். அனைத்து பணிகளையும் முடித்து, ஏற்கன்வே திட்டமிட்டபடி வரும் ஏப்ரல் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மனிமகுடமாகவும், அவரின் ரசிகர்களுக்கான திரைப்படமாக ‘லாபம்’ இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘துக்ளக் தர்பார்’ திரைப்படமும் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. ஆனால், ‘லாபம்’ படம் முதலில் வெளியாக வேண்டும், என்று விரும்பிய விஜய் சேதுபதி ‘துகளக் தர்பார்’ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமாரிடம் நேரடியாக பேசியதால், அவர் தனது படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றிக் கொண்டாராம்.
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...
நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...