67 வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த ‘அசுரன்’ சிறந்த தமிழ்ப் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
’அசுரன்’ படத்திற்காக தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘விஸ்வாசம்’ படத்திற்காக டி.இமான் சிறந்த இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பார்த்திபன் இயக்கி நடித்து தயாரித்த ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு ஜூரி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘ஒத்த செருப்பு’ படத்திற்காக ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஒலிப்பதிவாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...
நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...