Latest News :

சர்ச்சையில் சிக்கிய குக் வித் கோமாளி நிகழ்ச்சி!
Tuesday March-23 2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதோடு, பிக் பாஸ் நிகழ்ச்சியைப் போன்று, அந்த நிகழ்ச்சிக்கு என்று தனியாக ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களை தொடங்கி கொண்டாடி வருகிறார்கள்.

 

இதன் காரணமாக, குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பிக் பாஸ் போன்று பல சீசன்களாக தயாரிக்க முடிவு செய்திருக்கும் விஜய் தொலைக்காட்சி, புது புது பிரபலங்களையும் நிகழ்ச்சியில் இறக்க திட்டமிட்டுள்ளது.

 

இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான கண்டனங்களும் எழுந்துள்ளது.

 

இதற்கு என்ன காரணம், குக் வித் கோமாளிக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தது ஏன்? என்பது குறித்து, ரேஷ்மி பச்சை என்பவர் முகநூலில் எழுதியுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

அந்நிகழ்ச்சியில், கறுப்பு என்றால் அசிங்கம் கிராமத்துப்பெண் என்றால் முட்டாள். இப்படிப்பட்ட சித்தரிப்புகளை உள்ளடக்கிய அருக்காணி கதாபாத்திரத்தை காட்டினாலே மக்கள் சிரிப்பார்கள் என்ற சீப்பான மனநிலை குக்வித்கோமாளி குழுவினருக்கு உள்ளது வருத்தமளிக்கிறது.

 

ரொம்ப நாளா என்ன உறுத்துற ஒரு விஷயம் Cook with comali… இந்த ஷோ பெயரே எனக்கு முரணா தோணும்.. சரி என்ன தான் பண்றாங்கன்னு பாக்கலாம் னு 2 ஷோ பாத்தேன்…. முற்றிலும் முரண் தான் தெரியுது… அதிகப் படியான body shaming,racism ஜோக்ஸ்… இத முற்போக்காளர்களும் உணராம கொண்டாடுறாங்க. Depression போகுது மைன்ட் பிரீ ஆகுதுன்னு நெனைச்சா நீங்க அறியாமை என்னும் அரை ஒளில பார்க்குறிங்க உலகத்தை…ஒரு தரப்பை மன அழுத்ததில் இருந்து விடுவிக்க ஏற்கனவே ஒடுக்கப்பட்ட ஒரு தரப்பை மேலும் புண்படுத்தி மன அழுத்தத்தை உருவாக்குவது என்ன நியாயம்… அது நிச்சயம் சரியானதா இருக்க முடியாது… பெரியவர் முதல் சிறியவர் வரை பாக்குற கொண்டாடுற ஒரு content அ காலத்திற்கு ஏற்ற போல வடிவமைக்கப்பட வேண்டும்…அடுத்தவன் கலர், உடல் வடிவமைப்ப கேலிக்கு உட்படுத்தி சிரிக்குறது பெயர் #SADIST

 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் இப்படி தான் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அந்த நிகழ்ச்சியால் விஜய் தொலைக்காட்சி டி.ஆர்.பி-யில் சன் தொலைக்காட்சியின் மிக அருகில் சென்றுள்ளது. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கும் இப்படி ஒரு எதிர்ப்பு கிளம்பியிருப்பதால், இதுவும் விஜய் தொலைக்காட்சிக்கு இலவச விளம்பரபமாகவே அமையும், என்ற கருத்துகளும் உலா வருகிறது.

Related News

7416

”’தண்டேல்’ படத்திற்காக என்னை மாற்றிக் கொண்டேன்” - நடிகர் நாக சைதன்யா
Friday January-31 2025

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...

விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ‘தருணம்’! - ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகிறது
Wednesday January-29 2025

சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள  "தருணம்"  திரைப்படம், வரும்  ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான  திரையரங்குகளில் உலகமெங்கும்  வெளியாகிறது...

ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘மை லார்ட்’ படத்தின் முதல் பார்வை வெளியானது!
Wednesday January-29 2025

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...

Recent Gallery