டிரீம் வாரியர் நிறுவனத்தின் தயாரிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா, நெப்போலியன், லால், யோகி பாபு, ‘கே.ஜி.எப்’ புகழ் ராமச்சந்திர ராஜு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘சுல்தான்’. வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இந்த நிகழ்வில் கார்த்தி, ராஷ்மிகா, பாடலாசிரியர் தனிக்கொடி, விவேகா, நடிகர்கள் பிரின்ஸ், சென்றாயன், கேஜிஎஃப் புகழ் ராமச்சந்திர ராஜு, ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன், இசைய்மைப்பாளர்கள் விவேக் மெர்வின், நடன இயக்குநர் ஷோபி, படத்தொகுப்பாளர் ரூபன், இயக்குநர் பாக்யராஜ் கண்ணன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
படம் குறித்து கூறிய கார்த்தி, “இவ்விழா குடும்ப விழா போன்ற உணர்வைத் தருகிறது. சொந்த பந்தம் கூட இருப்பதே பெரும் மகிழ்ச்சி என்பதை கொரோனா சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதேபோல், ஒரு படத்தைச் சுற்றியே அனைவரின் சிந்தனையும் இருந்தால், இந்த சினிமாத் துறை தோல்வியுறாது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஒவ்வொரு இலக்கு. அந்த நம்பிக்கையை இப்படத்தின் பாத்திரங்கள் கொடுத்திருக்கிறது.
முரட்டுத்தனமான 100 ரவுடி அண்ணன்களுக்கு சாந்தமான ஒரு தம்பி, என்கிற ஒரு வரியிலேயே நான் ஒப்புக் கொண்ட கதை தான் சுல்தான். அதேபோல், நான் தான் நடிக்க வேண்டும் என்று 2 வருடங்கள் பொறுமையாகக் காத்திருந்து இயக்கியிருக்கிறார் பாக்கியராஜ் கண்ணன். இப்படம் வெற்றிபெற்றால் பல மொழிகளிலும் மறுஉருவாக்கம் செய்யப்படும்.
ஒரு படத்திற்கு கதாநாயகன் மிகவும் முக்கியம். அதேபோல், கதாநாயகியும் முக்கியம். அதைவிட வில்லன் மிக மிக முக்கியம். இப்படத்திற்கு வில்லன் ராமச்சந்திரராஜு சிறப்பாக அமைந்திருக்கிறார்.அவர் வந்து நின்றாலே பயமாக இருக்கும்.
என்னைப் பொறுத்தவரை நடிகர் லால் கட்டப்பா மாதிரி. எந்தக் காட்சியாக இருந்தாலும், எந்தப் பாத்திரமாக இருந்தாலும் லால் திறமையாகச் செய்கிறார்.
யோகிபாபுவின் படங்களைப் பார்த்து ரசித்துச் சிரித்திருக்கிறேன். ஆனால், அவருடன் இப்படம் மூலம் முதன்முதலாகப் பணியாற்றும் போது தான் அவர் மிகப் பெரிய புத்திசாலி என்று தெரிந்தது. அவருக்கு ஒருமுறை போன் பேசும்போது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்றார். அவரிடம் ஒரு விளையாட்டு வீரர் ஒளிந்திருக்கிறார் என்று அப்போது தான் தெரிந்தது. இப்படிப் பல திறமைகள் அவரிடம் உள்ளது.
நெப்போலியன் அவர்கள் நண்பராகத் தான் இப்படத்தில் பணியாற்றினார். ராஷ்மிகா இதுவரை கண்ணால் மிரட்டிக் கொண்டிருந்தார். ஆனால், இப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக வலிமையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பால் கறப்பது, சேற்றில் வேலை செய்வது, மாட்டுவண்டி ஓட்டுவது என்று அனைத்தையுமே எளிதாகச் செய்திருக்கிறார். அனைவருக்கும் இவரைப் பிடிக்கும். அதேபோல் அவர் புத்திசாலியும் கூட.
ஷோபி சிறப்பாக நடனம் அமைத்திருந்தார். சிங்கம்புலி, பொன்வண்ணன், மாரிமுத்து இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் உணர்வுகளையும் அனைவரின் மனதிலும் பதிய வைக்கும்படியாக பாக்கியராஜ் கண்ணன் கதை அமைத்திருக்கிறார். அனைவரும் பாதுகாப்புடன் இத்திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து மகிழுங்கள்
இப்படம் திரையரங்குகளில்தான் வெளியாகவேண்டும் என்கிற உறுதியுடன் இருந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி.” என்றார்.
’சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் மூன்றாவது படம் ‘வா வாத்தியார்’...
Treat kids on Children’s Day with some of the most exciting and entertaining shows that offer humor, adventure, and valuable life lessons including national and international cartoons with this affordable option on JioCinema...
முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் அடுத்த படைப்பான ‘பாராசூட்’ தொடரின் டீசர் வெளியானது...