’டம்மி டப்பாசு’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான ரம்யா பாண்டியன், ‘ஜோக்கர்’ படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலம் ஆனாலும், தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் தவித்து வந்தவருக்கு, சமுத்திரக்கனிக்கு ஜோடியாக, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக ‘ஆண்தேவதை’ என்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படமும் படுதோல்வி அடைந்ததால் ரம்யா பாண்டியனின் சினிமா வாய்ப்பு இருண்ட உலகமாகிவிட்டது.
இதற்கிடையே, ரம்யா பாண்டியன் தனது இடுப்பையும், அதில் இருக்கும் மடிப்பையும் வெட்ட வெளிச்சமாக காட்டும் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி, அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அவருடைய இடுப்பு புகைப்படங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, அப்படிப்பட்ட கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்துவதை தொடர்ந்த ரம்யா பாண்டியன், அந்த புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வந்ததால், அவருக்கு என்று தனி ரசிகர் வட்டமே உருவானது.
இதையடுத்து, குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வாய்ப்பு கிடைக்க, அதன் மூலம் சோசியல் மீடியாவில் பிரபலம் அடைந்தவருக்கு சில திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், திரைப்படங்களில் நடிப்பதால் பெரிய அளவில் சம்பாத்தியம் பார்க்க முடியாமல் தவிக்கும் ரம்யா பாண்டியன், வேறு வழியில் பணம் சம்பாதிக்க தொடங்கியிருப்பதாகவும், அவரின் விலை ரூ.10 லட்சம் என்றும் தகவல் வெளியாக, இதனால் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆம், ரம்யா பாண்டியனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அவரை பின் தொடர்கிறார்கள். இதனால், சில அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட பல வகையான பொருட்களை விற்பனை செய்பவர்கள், தங்களது பொருட்களை ரம்யா பாண்டியன் மூலம் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்து வருகிறார்களாம்.
அதன்படி, ஒரு பொருளை விளம்பரம் செய்ய வேண்டும் என்று ரம்யா பாண்டியன் கட்டணமாக ரூ.10 லட்சம் பெறுவதாக கூறப்படுகிறது. சில நிறுவனங்கள் இந்த தொகை அதிகமாக இருக்கிறது, என்று கூறினாலும், சில நிறுவனங்கள் அவர் கேட்கும் 10 லட்சம் ரூபாயை கொடுத்து தங்களது பொருட்களை விளம்பரம் செய்து வருகிறார்களாம்.
மேலும், ஊடகங்களில் பேட்டி கேட்டால், அதற்கும் தனி கட்டணம் வசூலிக்கும் ரம்யா பாண்டியன், திரைப்படங்களில் நடித்து சம்பாதிப்பதை விட, இதுபோன்ற வழிகளில் லட்சம் லட்சமாக சம்பாதிக்க தொடங்கியிருப்பதால், அவர் திரைப்படங்களில் நடிப்பதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் இருப்பதாகவும், கிசுகிசுக்கப்படுகிறது.
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...
நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...