பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நிலையில், முதல் முறையாக கதையின் நாயகனாக ’மதில்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். ’யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இப்படத்தை எஸ்.எஸ்.குரூப்பின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார்.
’லாக்கப்’, ‘க.பெ.ரணசிங்கம்’, ‘முகிலன்’, ‘ஒரு பக்க கதை’ உள்ளிட்ட தரமான படங்களை 2020 ஆம் ஆண்டி ரசிகர்களுக்கு வழங்கிய ஜீ5 ஒடிடி நிறுவனம், இந்த 2021 ஆம் ஆண்டும் பல தரமான படங்களை ரசிகர்களுக்கு வழங்க உள்ளது. அந்த பட்டியலின் முதல் படமாக வெளியாக உள்ள படம் ‘மதில்’.
கே.எஸ்.ரவிகுமார் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில், மைம் கோபி, பிக் பாஸ் புகழ் மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, லொள்ளு சபா சாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எம்.தியாகராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் மித்ரன் ஜவஹர் பேசுகையில், “இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். இதுவரை நான் குடும்ப படங்கள் அல்லது நகைச்சுவை படங்கள் தான் இயக்கியிருக்கிறேன். இப்போது தான் முதல் முறையாக சமூக படம் இயக்கியுள்ளேன். மதில் திரைப்படம் தமிழ் நாட்டில் அடிக்கடி நிகழும் முக்கிய பிரச்சனை பற்றி பேசுகிறது. கடினமாக உழைத்து, சேமித்து அதன் மூலம் சொந்த வீடு கட்ட முயற்சிக்கும் அனைவரின் கதை இது. பல சூழ்நிலைகளில் நமக்கு மேல் இருப்பவர்களின் அதிகாரத்தை கண்டு, அஞ்சி நாம் அமைதியாக இருந்து விடுகிறோம். இவற்றுக்கு எதிரான நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதன் அவசியம் ‘மதில்’ படத்தில் விளக்கப்பட்டுள்ளது” என்றார்.
கே.எஸ்.ரவிகுமார் கூறுகையில், “பக்கத்து தெருவில் அல்லது பக்கத்து வீட்டில் நடக்கும் தினசரி சம்பவங்களின் சுவாரஸ்யமான தொகுப்பு, அரசியல்வாதிகளுக்கு வகுப்பு, பொது மக்களுக்கு பொறுப்பு, களவாணி தனத்துக்கு மறுப்பு, காவல்துறைக்கு சிறப்பு, 'தனக்கென்ன' என்பவர்களுக்கு படிப்பு, திறமையானவர்களின் நடிப்பு, மொத்தத்தில் ‘மதில்’ ஒரு தில்லான படைப்பு. மனசாட்சி சொல்படி தைரியமாக எதிரிகளை களத்தில் சந்திக்கும் ஒரு தகப்பனின் உரிமைகுரல்தான் ‘மதில்’.” என்றார்.
நடிகர் மைம் கோபி கூறுகையில், “இன்றைய சூழ்நிலைக்கு மிகவும் தேவையான கதை இது. நமது மதில் சுவர்களை கஷ்டப்பட்டு அலங்கரிக்கிறோம், தூய்மையாக வைத்திருக்கிறோம். ஆனால் வேறு யாரோ அதை பயன்படுத்துகின்றனர், சொந்தம் கொண்டாடுகின்றனர். இதை பற்றி படம் பேசுகிறது.” என்றார்.
ஜீ5-யின் ஒரினல் தயாரிப்பான இப்படம் வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகிறது.
’சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் மூன்றாவது படம் ‘வா வாத்தியார்’...
Treat kids on Children’s Day with some of the most exciting and entertaining shows that offer humor, adventure, and valuable life lessons including national and international cartoons with this affordable option on JioCinema...
முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் அடுத்த படைப்பான ‘பாராசூட்’ தொடரின் டீசர் வெளியானது...